Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அந்த 144 தொகுதிகள்.. 2024 தேர்தலுக்கு பக்காவாக ஸ்கெட்ச் போடும் பாஜக.. பலனளிக்குமா?

Sekar [IST]
அந்த 144 தொகுதிகள்.. 2024 தேர்தலுக்கு பக்காவாக ஸ்கெட்ச் போடும் பாஜக.. பலனளிக்குமா?Representative Image.

பாரதிய ஜனதா கட்சி (BJP) 2019 மக்களவைத் தேர்தலில் அதன் வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த 144 பலவீனமான மக்களவைத் தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.

இந்த உத்தியின்படி, கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் நாடு முழுவதும் உள்ள இந்த 144 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குச் சென்று கட்சித் தொண்டர்கள் மற்றும் பல்வேறு நலத் திட்ட பயனாளிகளுடன் உரையாட உள்ளார்கள்.

2024 தேர்தல் : பலவீனமான தொகுதிகளில் கவனம் செலுத்தும் பாஜகவின் திட்டம்

மோடி அரசின் சாதனைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புதல், பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் உரையாடல், உள்ளூர் செல்வாக்கு மிக்கவர்களின் வீடுகளில் மதிய உணவில் பங்கேற்பது உள்ளிட்ட அவுட்ரீச் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பலவீனமான மக்களவைத் தொகுதிகள் மற்றும் அவைகளின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகள் பற்றிய விரிவான தகவல்களைக் கட்சி சேகரிக்கும். இதில் ஜாதி மற்றும் பிற விஷயங்கள் பற்றிய தரவுகள் இடம் பெறும்.

இந்த நாடாளுமன்றத் தொகுதிகளில் கட்சி வாக்குச் சாவடி மட்டத்தில் பலப்படுத்தப்படும். தேர்தல் நடைபெறும் வரை அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்த இடங்களில் மூன்று மட்டங்களில் தலைவர்கள் பணியாற்றுவார்கள். அமைப்பு பொறுப்பாளர் ஒவ்வொரு தொகுதியிலும் 15 நாட்களுக்கு ஒருமுறை ஒரு இரவு தங்கி பணிகளை மேற்கொள்வார்.

ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் சிறப்பு ஊடக பொறுப்பாளர் ஒருவர் இருப்பார். மேலும் மக்கள் தொடர்பு திட்டங்கள் தொடங்கப்படும். உஜ்வாலா யோஜனா, ஸ்வச் பாரத் மிஷன் மற்றும் ஜன் தன் யோஜனா உள்ளிட்ட மோடி அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளைச் சென்றடைவதில் பாஜக உறுப்பினர்கள் கவனம் செலுத்துவார்கள்.

கட்சியின் முன்னணி அமைப்புகள் மற்றும் செல்கள் பெண்கள், விவசாயிகள், சிறுபான்மையினர் மற்றும் இளைஞர்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளையும் சென்றடையும். மத்திய அரசின் திட்டங்களின் பயனாளிகளுடன் மத்திய அமைச்சர்கள் செல்ஃபிக்களை எடுத்து பதிவேற்றுவார்கள்.

கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மூன்று முறை அமேதி எம்பியுமான ராகுல் காந்தியை தோற்கடித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அமேதியில் 2014இல் தோல்வியைத் தழுவிய பிறகு கணிசமான நேரத்தை மக்களுக்காக களத்தில் செலவிட்டார். இதன் மூலமே 2019இல் நேரு குடும்ப வாரிசான ராகுல் காந்தி வீழ்த்தப்பட்டார்.

இந்நிலையில், தற்போது தேர்தலுக்கு இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில், தாங்கள் பலவீனமாக இல்ல 144 தொகுதிகளிலும் இதே பார்முலாவை பயன்படுத்த உள்ளது. 2024 தேர்தலுக்கு காங்கிரஸ் ஏற்கனவே பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், தற்போது பாஜகவும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் 2024 தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்