திமுக மீது அதிருப்தியில் உள்ளவர்களை குறிவைத்து பாஜக தூக்கி வரும் நிலையில், தற்போது திமுக பெரும் தலைகளின் வாரிசுகளை பாஜகவில் இணைக்க தனி டீமே அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து மாற்றுக்கட்சிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். வடக்கில் அசுர பலத்தில் உள்ள பாஜக தெற்கில் கர்நாடகாவை தவிர வேறு எங்கும் கால் பதிக்க முடியவில்லை. இதனையடுத்து 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தெற்கை கைப்பற்றுவதில் பாஜக தலைமை தீவிரம் காட்டி வருவது பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை பல போராட்டங்களை நடத்தி வருகிறார். எதிர்கட்சியான அதிமுகவே அவ்வளவாக எதுவும் பேசாத நிலையில், அண்ணாமலை அடிக்கடி போராட்டம், செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி வருவது ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
திமுக வாரிசுகளை வலைக்கும் பாஜக:-
திமுக அரசு மீது வாரிசு அரசியல் குற்றம் சாட்டி வரும் பாஜக தற்போது, திமுகவின் பெருந்தலைகளின் வாரிசுகளை பாஜகவில் இணைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. நல்ல பதவி கொடுப்பதாகவும், ஆசை வார்த்தைகளையும் கூறியும் பாஜகவில் இணைந்து வருகிறது. அதன்படி, திமுக பொதுச் செயலாளராக இருந்த அன்பழகனின் பேரன் அன்புகிரியை தங்கள் பக்கம் இழுத்தது பா.ஜ.க. சமீபத்தில் தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவை கட்சியில் இணைத்து திமுகவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.
திமுகவின் பதிலடி:-
திமுக மீது வரும் விமர்சனங்களுக்கு பெரும்பாலும், மேல்மட்ட தலைவர்கள் எந்தவித பதிலும் அளிப்பதில்லை, அதை கவனித்துக்கொள்ள ஐடி விங், மற்றும் எதாவது எம்பியை வைத்து பேச வைப்பார்கள். இது தான் தற்போது திமுக பின்பற்றி வரும் திராவிட மாடல் பாணி. அதன்படி,, திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்ததற்கு தருமபுரி எம்பி, எங்கள் கண் அசைவுக்காக பாஜக எம்.எல்.ஏக்கள் திமுகவில் இணைய காத்திருப்பதாக தெரிவித்தார். இதற்கு பாஜக எம்.எல்.ஏ, வானதி சீனிவாசன் முடிந்தால் தூக்கி பாருங்கள் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…