Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய், அஜித் படத்திற்கு வில்லங்கம்; கொந்தளிக்கும் பாஜக!

KANIMOZHI Updated:
விஜய், அஜித் படத்திற்கு வில்லங்கம்; கொந்தளிக்கும் பாஜக! Representative Image.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கொந்தளித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கலன்று வெளியாகும் சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ள   படங்களின் டிக்கெட்டுகள் வெளிப்படையாக ரூபாய்.1000 முதல் ரூபாய் 3000 வரை விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த சட்ட விதி மீறல்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விவகாரம். பண்டிகை காலங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களின் மூலம் ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் 'சூது' இந்த சட்ட விரோத டிக்கெட் விற்பனை.

இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மாநில அரசினுடையது. சட்ட விரோதமாக செயல்படும் இந்த ஒட்டுமொத்த அமைப்பை முடக்குவதோடு, திரைப்பட மாஃபியாக்களை கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம் மாநில அரசுக்கு உள்ளது.  ஆனால், இதை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளவர்கள் ஆட்சி  அதிகாரத்தில் உள்ளார்கள் என்பதோடு, தமிழக காவல் துறை கை கட்டி. வாய் பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை சுரண்டும் கேவலமான அராஜகம் இது. சூதை ஒழிக்கப்போவதாக முழங்கி கொண்டிருக்கும் அரசின் கொடூர முகத்தை நட்டநடு நிசி 1 மணிக்கு படங்களை  திரையிட அனுமதியளித்துள்ளது வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்  நிறுவனமே,  இந்த படங்களின்  விநியோக உரிமையை பெற்றிருப்பது சட்ட விரோதமாக செயல்படும் கொள்ளையர்களின் கூடாரமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருப்பதை தெளிவாக்குகிறது.

 பல்வேறு விவகாரங்களை தானாகவே முன்வந்து விசாரிக்கும் சென்னை உயர்நீதி மன்றம்,  இந்த சூதை, பகல் கொள்ளையை, அரசின் அத்துமீறலை, சட்ட விரோத நடவடிக்கையை, அராஜகத்தை வேடிக்கை பார்க்காமல் மாநில தி மு க அரசை கண்டிப்பதோடு, உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையேல் கொள்ளையர்களின் அட்டகாசம் மேலும் பெருகி கொண்டே இருக்கும் என பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்