Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழர்களின் கலாச்சாரத்தில்  தேவையில்லாமல் மூக்கை நுழைக்காதீங்க.. ஆளுநரை எச்சரித்த கனிமொழி! 

KANIMOZHI Updated:
தமிழர்களின் கலாச்சாரத்தில்  தேவையில்லாமல் மூக்கை நுழைக்காதீங்க.. ஆளுநரை எச்சரித்த கனிமொழி! Representative Image.

தமிழக ஆளுநர் தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என கூறுவது தமிழர்களின் வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் மூக்கை நுழைக்க துவங்கியுள்ளனர், இதற்கு எதிராக தமிழர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தூத்துக்குடியில் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி பேச்சு.

தூத்துக்குடியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா தூத்துக்குடி நடைபெற்றது. இதில் 25 க்கும் மேற்பட்ட பானைகளில் வரிசையாக வைத்து பொங்கல் இடப்பட்டது.  அப்போது விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள் கரும்பு மஞ்சள் உள்ளிட்ட விளைநிலங்களில் விளைந்த காய்கறிகளை சூரிய பகவானுக்கு படைத்தனர்.  

திமுக கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி பொங்க பானை பொங்கும் போது பச்சரிசி,  வெல்லம் ஆகியவற்றை பொங்கல் பானையின் உள்ளே போடும்போது சுற்றி இருந்த மகளிர் குலவை இட்டு மகிழ்ந்தனர்.  

இதை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 1000 ஏழை, எளிய பெண்களுக்கு சேலை வழங்கி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி,  ஒவ்வொரு பகுதி மக்களுக்கும், மதத்தினருக்கும், ஒவ்வொரு பண்டிகை மற்றும் திருவிழா கொண்டாடுவது வழக்கமையான ஒன்று. ஆனால் நம் அனைவரையும்  தமிழர்களாக இணைக்க கூடிய ஒரு விழா என்றால் பொங்கல் விழா தான்  நாம் எந்த மதமாக இருந்தாலும் இந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும் நன்றி செலுத்துவதற்காக பொங்கல் விழாவை தமிழர்களாக ஒன்றிணைந்து கொண்டாடி வருகிறோம்.  இந்த பொங்கல் விழாவை ஆண்டுதோறும் திராவிட முன்னேற்றக் கழகம்  அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார்.

 

மேலும் தற்போது ஆளுநர் தமிழ்நாடு  என்று ஏன் அழைக்கிறீர்கள் தமிழகம் என்று அழைக்க வேண்டியது தானே என்று சொல்கிறார். ஆளுநர் நமது அடையாளம், கலாச்சாரம், பண்பாடு, வரலாற்றில் மூக்கை நுழைக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் நாம் தமிழர்களாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக  பெருமையுடன் இந்த பொங்கல் விழாவை நாம் கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த பொங்கல் திருவிழா நேரத்தில் நாம் அனைவரும் ஒரு சூளுரை எடுத்துக் கொள்ள வேண்டும் அது என்னவென்றால்  தமிழ்நாட்டை, தமிழ் மொழியை, தமிழ் அடையாளத்தை தமிழர்களின் பெருமைகளை மற்றும் நமது திறமைகளை நமது வரலாற்றை பாதுகாக்க இந்த தைத்திருநாளில் நாம் உறுதி எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்