Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Politics : மத்திய அரசை விளாசிய ப.சிதம்பரம்..!

Muthu Kumar May 14, 2022 & 20:20 [IST]
Politics : மத்திய அரசை விளாசிய ப.சிதம்பரம்..!Representative Image.

Politics : காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

சிந்தன் சிவிர்

உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தன் சிவிர்’ இரண்டாம் நாள் மாநாடு தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், டெல்லியில் முண்டுகா பகுதியில் நேற்று நடந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக இரங்கலை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார். 

ஆலோசனை 

உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிந்தன் சிவிர் கூட்டத்தில் நேற்று கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் ஆலோசனை நடத்தினோம். மேலும், இன்று மற்றும் நாளையும் ஆலோசனை தொடரும் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

வேலையின்மை 

இந்தியாவில், வேலையின்மை விகிதம் 7.88% ஆக உயர்ந்துள்ளதாக ப.சிதம்பரம் சாடினார். மேலும் மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் பொருளாதாரம், விவசாயம், விவசாயிகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஆலோசிக்க உள்ளோம். 

இந்நிலையில், இந்தியாவில் பொருளாதார கொள்கைகளில் உடனடி மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்