Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிமுகவிலிருந்து திமுக...திமுகவிலிருந்து பாஜக...கட்சி விட்டு கட்சி தாவிய கவுன்சிலர்..!

madhankumar August 08, 2022 & 19:02 [IST]
அதிமுகவிலிருந்து திமுக...திமுகவிலிருந்து பாஜக...கட்சி விட்டு கட்சி தாவிய கவுன்சிலர்..!Representative Image.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் லியோ சுந்தரம் இன்று திமுகவில் இருந்து விலகி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் பாஜகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. இதில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் 134வது வார்டில் தன்னை எதிர்த்து போட்டியிட திமுகவின் கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரை 2036 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.இதையடுத்து முதன்முறையாக சென்னை மாநகராட்சிக்குள் பாஜக அடியெடுத்து வைத்தது. சென்னை மாநகராட்சி தேர்தலில் மற்ற இடங்களில் பாஜக தோல்வியடைந்தாலும், பல இடங்களில் 2 ஆம் இடத்தை பிடித்தனர்.

இந்நிலையில் 198 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லியோ சுந்தரம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்த அவர் மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்,தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் பாஜகவில் மாநகராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்