Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

ராஜ ராஜ சோழனை கௌரவிக்க முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

Priyanka Hochumin November 02, 2022 & 14:45 [IST]
ராஜ ராஜ சோழனை கௌரவிக்க முதல்வரின் அதிரடி அறிவிப்பு!  Representative Image.

சோழ மன்னர்களில் மக்களால் இன்றளவும் போற்றப்படும் ராஜ ராஜ சோழனின் 1037 ஆவது பிறந்தநாளை இன்றும் நாளையும் மக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதை மேலும் சிறப்பாக மாற்ற தமிழக முதல்வர் அவர்கள், இனி ராஜ ராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்னும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கோவில் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தஞ்சை பெரிய கோவில். பிறகு அதை கட்டிய ராஜ ராஜ சோழன். அந்த கோவில் கட்டி 1000 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்று வரை சிறி துரும்பு கூட நகராமல் நிற்பதை மக்கள் போற்றி வருகின்றனர். எனவே, சோழர்களின் பெருமையை உலகளவில் தெரிய படுத்த வேண்டும் என்பதின் முயற்சியாக இயக்குனர் மணிரத்னம் இயக்கிய "பொன்னியின் செல்வன்" சமீபத்தில் வெளிவந்து பல சாதனைகளை படைத்துள்ளது.

இது மட்டும் இன்றி, தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழனின் பிறந்த நாளான 1037வது சதய விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவரை கௌரவிக்கும் வகையில் இனி வரும் ஒவ்வொரு ராஜ ராஜ சோழனின் பிறந்த நாள் அன்று அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இது போக தஞ்சாவூரில் உள்ள, அவரது மணிமண்டபம் பொலிவூட்டப்பட்டு, கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பை கேட்ட, அரசியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் வரவேற்று வருகின்றனர்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்