Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்திற்கு மோடி அரசு என்ன செய்தது...பதிலளிக்க அமித்ஷா தயாரா? முதல்வர் ஸ்டாலின் சவால் | Amit Shah Tamil Nadu Visit

Priyanka Hochumin Updated:
தமிழகத்திற்கு மோடி அரசு என்ன செய்தது...பதிலளிக்க அமித்ஷா தயாரா? முதல்வர் ஸ்டாலின் சவால் | Amit Shah Tamil Nadu VisitRepresentative Image.

இன்று [ஜூன் 11] தமிழகத்திற்கு வருகைத் தரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம், மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்படுத்திய சிறப்புத் திட்டங்களை பட்டியலிடுமாறு கேட்டுக்கொண்டார்.

வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் அமித்ஷா. எனவே, இன்று தமிழகத்தின் வேலூர் பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி உரையாற்ற உள்ளார். இதற்காக தமிழகம் வரும் பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷாவிடம் வெளிப்படையாக ஒரு கேள்வி கேட்கிறேன், "கடந்த 9 வருடங்களாக மத்திய அரசு தமிழகத்திற்கு செய்த சிறப்புத் திட்டங்களை பட்டியலிட்டு சொல்லுங்கள்" என்று சனிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் கேள்வியை எழுப்பினார்.

அதற்கு பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் (2004-14) திமுக அங்கம் வகித்தபோது செயல்படுத்தப்பட்ட பல சிறப்பு முயற்சிகளைப் பட்டியலிட்டார். அதனை தெரிவித்த பின்பு 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் திட்டத்தை ஏன் இன்னும் செயல்படுத்த வில்லை என்று சுட்டிக்காட்டினார். மேலும் மாநிலத்திற்கு பாஜக கொடுத்தது - இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பது, தமிழை ஓரங்கட்டுவது மற்றும் நீட் தேர்வில் நடக்கும் முரண்பாடு என்று அடுக்கிக்கொண்டே இருந்தார். அடுத்ததாக மூன்று விவசாயச் சட்டங்களை அமல்படுத்துவதாக சொல்லி விவசாயிகளை துன்புறுத்தியது, குடியுரிமை சட்டத்தின் மூலம் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது மற்றும் மாநில உரிமைகளை பறிக்க முயன்றது என்று பல குற்றச்சாட்டுக்குகளை முன்வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழகம் மற்றும் இல்லாமல் இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்காக முதல்வர் ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பதிலளிப்பாரா என்று பாப்போம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்