Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

மீண்டும் தலைவராவாரா ராகுல் காந்தி..? மதில் மேல் பூனையாக காங்கிரசார்..!!

Sekar August 22, 2022 & 19:25 [IST]
மீண்டும் தலைவராவாரா ராகுல் காந்தி..? மதில் மேல் பூனையாக காங்கிரசார்..!!Representative Image.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தலுக்கான விரிவான அட்டவணை இன்னும் 3-4 நாட்களில் வெளியாகும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை மீண்டும் வழிநடத்த ராகுல் காந்தி சம்மதிப்பாரா இல்லையா என்பதுதான் ஒவ்வொரு காங்கிரஸ் தலைவர்களின் மனதிலும் உள்ள கேள்வி. 

செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அட்டவணை தயாராகி வருவதாக கட்சியின் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ராகுல் காந்தி மீண்டும் கட்சித் தலைவராக வருமாறு பல தலைவர்கள் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளனர், ஆனால் கட்சியின் தலைமைப் புதிர் குறித்து நிச்சயமற்ற மற்றும் சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது.

அக்கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதித் தேதிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒப்புதல் அளிக்க வேண்டும். அதே நேரம் தங்கள் தரப்பில் இருந்து தாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

காங்கிரஸ் அதன் செயற்குழுவின் முக்கியமான கூட்டத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டு அக்டோபரில் புதிய காங்கிரஸ் தலைவர் தேர்தல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

2019ல் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டாவது தோல்வியைச் சந்தித்ததை அடுத்து ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இடைக்காலத் தலைவராக மீண்டும் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற சோனியா காந்தியும் ஒரு பிரிவினரின் வெளிப்படையான கிளர்ச்சிக்குப் பிறகு ஆகஸ்ட் 2020 இல் விலக முன்வந்தார். ஆனால் காங்கிரஸ் செயற்குழு அவரைத் தொடருமாறு வலியுறுத்தியது.

காந்தி அல்லாத ஒருவரை கட்சி தேர்ந்தெடுக்கலாம்

காந்தி அல்லாத ஒருவருக்கு தலைவர் பதவி வழங்குவதில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். இதனால் அவர் சகோதரி பிரியங்கா காந்தி வதேராவை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுக்கிறார் எனக் கூறப்படுகிறது. அதே சமயம், உடல்நிலை காரணமாக சோனியா காந்தி பதவியில் இருக்க விரும்பவில்லை என்றும், சோனியாவுக்குப் பதிலாக காந்தி அல்லாத ஒருவர் பதவி வகிக்க வேண்டும் என்றும் ராகுல் விரும்புகிறார்.

ராகுல் காந்தி இன்னும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை

பல சுற்றுக் கூட்டங்கள் நடந்தாலும், கட்சிக்குள் உள்ள வியூகவாதிகளால் இதுவரை ராகுல் காந்தியை தலைவர் பதவிக்கு போட்டியிடச் செய்ய முடியவில்லை. கட்சிக்கு அவர் அளித்த பதிலில், தேர்தலில் போட்டியிடுவது குறித்த தெளிவான குறிப்பை ராகுல் தெரிவிக்கவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்