Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திமுகவுக்கு திருகுவலி.. போராட்டத்தில் குதிக்கும் அரசு ஊழியர்கள்!!

Sekar July 06, 2022 & 17:08 [IST]
திமுகவுக்கு திருகுவலி.. போராட்டத்தில் குதிக்கும் அரசு ஊழியர்கள்!!Representative Image.

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் மீண்டும் செயல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைளை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது திமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2003 ஆம் ஆண்டு வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்த நிலையில், 2004 ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு தேசிய பென்சன் திட்டம் (NPS) கொண்டுவரப்பட்டது.

பங்களிப்பு முறையில் செயல்படுத்தப்படும் இந்த பென்சன் திட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இதை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இதற்காக சிபிஎஸ் ஒழிப்பு எனும் இயக்கத்தை அரசு ஊழியர்கள் நடத்தி வருகின்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தில் அதிக பலன்களும், சலுகைகளும் இருந்த நிலையில், தேசிய பென்சன் திட்டத்தில் ஓய்வூதியத்துக்கான உத்தரவாதம் இல்லை என்பது தான் அரசு ஊழியர்களின் பிரச்சினையாக உள்ளது. 

இந்நிலையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. வழக்கமாக திமுகவுக்கு அரசு ஊழியர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும் என்றாலும், திமுகவின் இந்த வாக்குறுதியை நம்பி அரசு ஊழியர்கள் மொத்தமாக திமுகவுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்பட்டது.

​ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்துவிட்டார். இது திமுகவை நம்பி வாக்களித்த அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கமான சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் நாளை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

தங்களுக்கு பெருமளவில் ஆதரவை வழங்கிய அரசு ஊழியர் தரப்பு தற்போது கடும் அதிருப்தியில் உள்ளதோடு, ஆளும் திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளது திமுகவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்