Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துணை ஜனாதிபதி தேர்தல்.. பம்மும் எதிர்க்கட்சிகள்.. பாஜக திட்டம் என்ன?

Sekar July 06, 2022 & 15:54 [IST]
துணை ஜனாதிபதி தேர்தல்.. பம்மும் எதிர்க்கட்சிகள்.. பாஜக திட்டம் என்ன?Representative Image.

இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யார் என்பது குறித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மௌனம் காத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளும் எனக்கென்ன என விட்டேத்தியாக உள்ளது அரசியல் பார்வையாளர்களை உற்றுநோக்க வைத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல்

இந்தியாவின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இரண்டு பதவிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் தேர்தலை பயன்டுத்தி 2024 தேர்தலில் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்க வியூகம் வகுக்கும் வகையில், தன்னை அடுத்த பிரதமராக கற்பனை செய்துகொண்டு செயல்படும் மம்தா பானர்ஜி யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தினார்.

ஆனால் பாஜக பழங்குடியின சமூகத்தை சேர்ந்த திரௌபதி முர்முவை களமிறக்கி எதிர்கட்சிகளை திணற வைத்தது. திரௌபதி முர்மு சார்ந்த பழங்குடியின சமூகம் ஒடிஷாவில் தொடங்கி, சத்தீஸ்கர், மேற்குவங்கம், பீகார் மட்டுமல்லாது வடகிழக்கு இந்தியாவிலும் பரவியுள்ளது. இதனால் முர்முவை எதிர்ப்பது மிகமோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து மம்தா பானர்ஜி ஜகா வாங்கிவிட்டார்.

அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து யஷ்வந்த் சின்ஹாவை முன்மொழியச் செய்தாலும், அவர் சின்ஹாவின் மனுத்தாக்கலின் போது நேரடியாக கலந்து கொள்ளாததற்கு இது தான் பின்னணி என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

துணை ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தலிலேயே பாஜகவின் வலையில் சிக்கி மண்ணைக் கவ்வியதால், மிகவும் எச்சரிக்கையாக காய் நகர்த்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக எளிதில் வென்றுவிடும் என்பதாலும் கூட எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே பாஜக வேட்பாளராக யாரை முன்னிறுத்தும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடுவை மீண்டும் பதவியில் தொடர வைக்க பாஜக தலைமை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் பாஜக இந்த முறை முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதியாக முன்னிறுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.\

இதில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் துணை ஜனாதிபதி என்பவர் ராஜ்ய சபையின் தலைவராக அவையை வழிநடத்த வேண்டியிருக்கும் என்பதால், தடாலடி கருத்துக்கு பெயர்போன ஆரிப் முகமது கான் அதற்கு சரிவருவாரா என்ற கேள்வியும் உள்ளது.

இதனால் ஆரிப் முகமது கானுக்கு வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. நஜ்மா ஹெப்துல்லா பாஜக தலைமையின் நம்பிக்கைக்கு உரியவர், முன்னர் காங்கிரஸில் இருந்தபோது 15 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜ்யசபையின் துணைத் தலைவராக இருந்தவர், 2007'இல் ஹமீத் அன்சாரிக்கு எதிராக பாஜகவால் துணை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டவர் என்பதால் அவரையே மீண்டும் களமிறக்க பாஜக திட்டமிடலாம் எனத் தெரிகிறது.

எனினும் அவருக்கு தற்போது 82 வயது என்பதால், ராஜ்யசபையில் அதிக அனுபவம் கொண்டவரும், துணைத் தலைவராக இருந்தவருமான முக்தர் அபபாஸ் நக்வியை பாஜக முன்மொழியலாம் என்றும் கூறப்படுகிறது. அவர் தற்போது அமைச்சராக இருந்தாலும், ராஜ்ய சபை பதவிக்காலம் முடிந்த நிலையில், அவருக்கு மீண்டும் எம்பி சீட் தராததன் காரணம் இது தான் என்று பாஜக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

அதிகபட்ச வாய்ப்பு முக்தர் அப்பாஸ் நக்விக்கு தான் எனக் கூறப்பட்டாலும், எதிர்பாராத முடிவுகளை அறிவிப்பது தான் பாஜக பாலிசி என்பதால், அறிவிப்பு வெளியான பிறகு தான் யார் என்பது உறுதியாக தெரிய வரும்.

எதிர்க்கட்சி முகாமைப் பொறுத்தவரை, ஜனாதிபதி தேர்தலைப் போல் ஏமாறாமல், பாஜக வேட்பாளரை அறிவித்த பிறகு சாவகாசமாக முடிவெடுத்து அறிவித்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்