Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாஜகவுக்கு எதிர்க்கட்சிகளை முடக்கும் நோக்கம் மட்டும் தான் - ஆளும் தலைவர்கள் கண்டனம்!

Abhinesh A.R Updated:
பாஜகவுக்கு எதிர்க்கட்சிகளை முடக்கும் நோக்கம் மட்டும் தான் - ஆளும் தலைவர்கள் கண்டனம்!Representative Image.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடக்கும் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக, அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிபிஐ தேசிய பொதுசெயலாளர் டி.ராஜா ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அவர்கள், “அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது கண்மூடித்தனமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். ஜனநாயகத்திற்கு மாற்றமுடியாத சேதத்தை பாஜக ஏற்படுத்துகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு அமலாக்கத்துறையை பயன்படுத்துவது கண்டிக்கதக்கது." என்று கூறினர்.

மேலும், விசாரணை அமைப்புகளை தவறாக பாஜக பயன்படுத்துகிறது. இந்த நடவடிக்கைக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இது பாஜகவின் அராஜக போக்கை மக்களுக்கு எடுத்து காட்டுகிறது எனவும் கூறியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்