Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் திமுக முறையீடு.. உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை..!

Saraswathi Updated:
செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் திமுக முறையீடு.. உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை..!Representative Image.

செந்தில்பாலாஜி கைது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா சார்பில் இந்த மனுவானது ஆட்கொணர்வு மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில்பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார்.

இதனிடையே செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா சார்பில் இது தொடர்பான மனுவானது ஆட்கொணர்வு மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைது குறித்து எந்தவிதத் தகவலையும் குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை என்றும், கைது செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் அமலாக்கத்துறை வழங்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இந்த ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் திமுக வழக்கறிஞர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை சோதனையின்போது செந்தில்பாலாஜியை சந்திக்க வழக்கறிஞரைக் கூட அனுமதிக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்ற திமுக வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்