Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் திமுக தோல்வி' - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி

Saraswathi Updated:
'எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் திமுக தோல்வி' - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டிRepresentative Image.

அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில்  தி.மு.க. தோல்வி அடைந்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன் ஒரு பகுதியாக,  சிறுவர்களின் மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், 3 சிறுமிகள் மல்லர் கம்பத்தில் இருந்தபடி யோகாசனம் செய்து அசத்தினர். 

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,  ஜூன் 21-ம் நாளை உலக யோகா தினமாக கடைபிடிக்க வேண்டும் என ஐ.நா.சபையில் இந்தியா வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான் உலக யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா.சபையில் 190 நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து இன்று யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். யோகாவை சரித்திரம் வாய்ந்த இடத்தில் செய்வது சிறப்பு.  

 கடந்த மூன்று மாத காலமாக மத்திய அரசு குறித்து தமிழக முதலமைச்சர் பேச ஆரம்பித்திருக்கிறார். தமிழக அரசின் ஆட்சி கடும் அதிர்ச்சியில் இருக்கிறது என்பது முதலமைச்சருக்குத் தெரியும். மக்கள் யாரும் தி.மு.க. ஆட்சியை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. அதனை மறைப்பதற்காக, மத்திய அரசின்மீது தமிழக அரசு வேண்டுமென்றே பழிபோடுகிறது. 

இதற்கு நேற்று நடைபெற்ற திருவாரூர் கூட்டமே சாட்சி. முதலில் குடியரசுத்தலைவர் வருவார் என தெரிவித்தார்கள். ஆனால் அவர் வரவில்லை அடுத்து பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் வருவார் என தெரிவித்தார்.   உடல் நலக்குறைவு காரணமாக அவரும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. கடைசியில், பீகார் மாநில துணை முதலமைச்சர்  தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டுள்ளார். அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில்  தி.மு.க. தோல்வி அடைந்திருக்கிறது என்பது நேற்று நிதீஷ் குமார் தமிழகம் வராதது வெளிக்காட்டுகிறது. 

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது என்பது தமிழக முதலமைச்சருக்கு கனவாக மட்டுமே இருக்கும். மக்கள், பாரதிய ஜனதா கட்சியை விரும்ப ஆரம்பித்து விட்டார்கள். மூன்றாவது முறையாக மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமையும். அகில இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 39 எம்பிக்கள் உள்ளிட்ட நானூறு எம்பிக்கள் பாஜகவுக்கு கிடைக்கும். 

மாநில மனித உரிமை ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. அரசு மருத்துவமனையில் எங்களது அமைச்சர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அரசு சொல்கிறது. அப்படி என்றால் சாமானியர்களுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்? தமிழகத்தில் அரசு எந்திரம் ஒட்டுமொத்தமாக தோற்றுவிட்டது என்பது செந்தில் பாலாஜி கைது விவகாரம் உள்ளிட்டவைகள் காட்டுகிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்