Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'சமூகப் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி' - பிரதமர் மோடி, அமித்ஷா மீது திருமாவளவன் குற்றச்சாட்டு

Saraswathi Updated:
'சமூகப் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி' - பிரதமர் மோடி, அமித்ஷா மீது திருமாவளவன் குற்றச்சாட்டு Representative Image.

அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காத ஆளுநர் ஆர்.என். திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்ட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்துக்கள் மற்றும் இந்துக்கள் அல்லாதவர்கள் என சமூக பதற்றத்தை ஏற்படுத்த பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முயற்சித்துவருவதாக மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் குற்றம்சாட்டினார்.  தொடர்ந்து பேசிய அவர், தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதும், பின்னர் அதை திரும்பப்பெறுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அரசமைப்புச் சட்டத்தை மதிக்காத ஆளுநர் ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர்  அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனைத்து மதத்தினருக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளது. இந்துக்களுக்காக தனி சட்டங்களும், வாரிசுரிமை சட்டங்களும், சொத்து பிரச்சினை குறித்துக் சட்டங்களும் நடைமுறையில் உள்ளன. இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவ அமைப்புகளுக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன. அது மட்டுமின்றிஅனைவருக்கும் பொதுவாக இந்திய அரசியலமைப்பு சட்டம் உள்ளது.

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பெயர்களை குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எதிர்க்கட்சிகள்  ஒருங்கிணைந்தால் பாஜக எந்த அளவிற்கு மாற்றம் அடைகிறது என்பதை பிரதமர் மோடியின் பேச்சின் மூலம்  நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய விடாமல் தடுக்க வேண்டும். அவர்களை அச்சுறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் திசைதிருப்பும் நடவடிக்கையாக  சங்பரிவார் அமைப்புகள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பிஜேபியை வீழ்த்துவது என்ற ஒரே இலக்கை முன்னுறுத்துவதுதான் இந்த எரிச்சலுக்கு காரணம். சிவில் சட்டம் என்ற விவாதத்தை, பிரதமர் மோடியாக இருந்தாலும் சரி, அமித்ஷாவாக இருந்தாலும் சரி பதற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். மக்கள் இதை முறியடிப்பார்கள். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்