Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Politic News : அதிமுகவோட இணைய வாய்ப்பில்லை... டிடிவி தினகரன் அதிரடி..!

Muthu Kumar July 14, 2022 & 15:45 [IST]
Politic News : அதிமுகவோட இணைய வாய்ப்பில்லை... டிடிவி தினகரன் அதிரடி..!Representative Image.

Politic News : சசிகலா தலைமையில் திவாகரனின் கட்சி அதிமுகவில் இணைந்த நிலையில் அமமுக இணைய வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சியில் ஒற்றைத்தலைமை குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில்,  அதிமுகவின் பொதுசெயலாளர் என சசிகலா கூறியுள்ளார். மேலும், கழக பொதுசெயலாளர் என்ற பெயரில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் கட்சி தஞ்சாவூரில் சசிகலா முன்னிலையில் அதிமுகவுடன் இணைந்தது. இதனைதொடர்ந்து சசிகலாவின் அதிமுக கட்சியில் அமமுகவும் இணையுமா என சர்ச்சைகள் கிளம்பின.

இதுகுறித்து விளக்கமளித்த அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், “அதிமுகவில் என்றுமே அமமுக இணையாது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கு இருந்தாலும் அமமுகவில் இணைந்து, மீண்டும் தமிழ்நாட்டிற்கு அவரின் ஆட்சியை கொண்டுவர அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்