Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எடப்பாடி பழனிசாமி உயிருக்கு ஆபத்து..? பாதுகாப்பு வேண்டும்..!

Muthu Kumar August 12, 2022 & 16:50 [IST]
எடப்பாடி பழனிசாமி உயிருக்கு ஆபத்து..?  பாதுகாப்பு வேண்டும்..!Representative Image.

தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சிய்ல் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் எழுந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்களின் ஆதரவை திரட்டுவதற்காக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அந்த மனுவில், “முன்னாள் முதல் அமைச்சரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தென் மாவட்டங்களுக்கு அவர் பயணம் செய்ய உள்ள நிலையில் அங்குள்ள கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களாலும், சமூக விரோதிகளாலும் எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே அவருக்கு அதிகமான பாதுகாப்பை வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்