Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை: அமலாக்கத்துறை விளக்கம்...!

Baskaran Updated:
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை: அமலாக்கத்துறை விளக்கம்...!Representative Image.

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்றும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அதை வாங்க மறுத்து விட்டார். அவர் தரப்பில் விசாரணைக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை.

குற்றத்திற்கான முகாந்திரம் இருந்ததை உறுதி செய்த பின்னர் தான் கைது நடவடிக்கை மேற்கொண்டோம். செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மற்றும் சண்முகம் ஆகியோருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை. இதனால் அவரை கைது செய்யும் பட்சத்தில் அவர், ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளதால், பிஎம்எல்ஏ சட்டத்தின் அடிப்படையிலும், விசாரணை அதிகாரி கார்த்திக் தசாரிக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி வங்கி கணக்கில்  ரூ.1.34 கோடியும், அவரது மனைவி வங்கி கணக்கில் ரூ.29.55லட்சமும் இருந்தது. இது வருமான வரி கணக்கிற்கு முரண்பாடாக இருந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்காததே கைதுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்