Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரூ.404 கோடியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - அரசாணை வெளியீடு..!

Saraswathi Updated:
ரூ.404 கோடியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - அரசாணை வெளியீடு..!Representative Image.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டுவரும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை விரிவுபடுத்த ரூ.404 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் செயல்பட்டுவரும் அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். முதல் கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டுவரும் 1,545 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்பட்டது. இதன் மூலம் நாள்தோறும் 1 லட்சத்து 14ஆயிரம் மாணவ-மாணவியர் பயனடைந்துவருகின்றனர்.

இந்நிலையில், இந்த காலை உணவுத் திட்டத்தை ரூ.404 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்துவதற்கான அரசாரணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்பட்டுவரும் 31ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளுக்கு இத்திட்டம் கூடுதலாக செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், 15 லட்சத்து 75ஆயிரம் மாணவ-மாணவியர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்