Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மறைந்த தமிழ் பிரபலம்...நேரில் சென்று அஞ்சலி செலுத்திய...தமிழக முதல்வர்!

Priyanka Hochumin November 21, 2022 & 13:18 [IST]
மறைந்த தமிழ் பிரபலம்...நேரில் சென்று அஞ்சலி செலுத்திய...தமிழக முதல்வர்!Representative Image.

தமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைந்துவிட்டார். அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

91 வயதான அரூர்தாஸ் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக சென்னை தியாகராய நகரில் இருக்கும் தன்னுடைய வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். இப்படி இருந்த நிலையில் நேற்று காலமானார். இவரின் உடல் மந்தைவெளி பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இவரின் மறைவு குறித்து மிகவும் வருத்தத்துடன்  முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், "திருவாரூரில் பிறந்து திரையுலகில் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் முதுமை காரணமாக மறைவெய்தினார் என்பதை அறிந்து மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னுடைய சொந்த ஊரான திருவாரூரின் இயற்பெயர் ஏசுதாஸ். அதனின் பிற்பகுதியை தன்னுடைய பெயருடன் சேர்த்து அரூர்தாஸ் என்று வைத்துக் கொண்டு தான் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரது பெரும்பாலான படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியது இவர் தான். பாசமலர் திரைப்பட வசனங்கள் மூலம் பாமரமக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இவரின் கலைச்சேவையைப் பாராட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.

மேலும் தமிழ் திரையுலகில் வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டது. அந்த விருதினை இந்த ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் ஆரூர்தாஸ் அவர்களின் இல்லத்துக்கே சென்று வழங்கி மகிழ்ந்தேன். தன்னுடைய வசனங்கள் மூலம் மக்களையும் திரையுலகியும் ஆண்ட அவர் இன்று நம்முடன் இல்லை. என்றாலும், அவர் ஆற்றிய கலைப்பணிகள் என்றென்றும் தமிழ் திரையுலகிலும், படங்களை பார்த்து ரசித்த நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கும். இப்படி பட்ட மாமனிதரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்