Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி.. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்..!

Sakthi Updated:
தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி.. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்..!Representative Image.

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம். திண்டுக்கலில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சென்னையில் மத்திய மந்திரி அமித்ஷா பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, தொண்டர்களை உற்சாகமாக கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என பேசி உள்ளார். ஆனால் அ.தி.மு.க.வை பொறுத்தவரை புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

அந்த கூட்டணிக்கு இந்தியாவில் பா.ஜ.க. தலைமை வகிக்கிறது. ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி. இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசி இறுதி முடிவு எடுக்க கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அதுவரை எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்