Mon ,May 20, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

தமிழ்நாடு எதிர்காலத்தில் கருணாநிதி நாடு? - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல்

Saraswathi Updated:
தமிழ்நாடு எதிர்காலத்தில் கருணாநிதி நாடு? - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல்Representative Image.

தமிழகத்தில் நூலகம், விளையாட்டு மைதானம், நினைவுச்சின்னம், பேருந்து நிலையம், மருத்துவமனைக்கு கருணாநிதியின் பெயரைச் சூட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலபோக்கில் அண்ணாசூட்டிய தமிழ்நாடு என்ற பெயரைக்கூட கருணாநிதி நாடு என்று மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக அரசின் நிர்வாக குளறுபடி சட்ட ஒழுங்கு சீர்கேடு இவைகளால் தமிழகம் தலைகுனிந்துள்ளது.  தமிழக விளையாட்டு வீரர்களை தேசிய அளவில் பங்கேற்காத நிலையை உருவாக்கி இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை இந்த அரசு கேள்விக்குறியாகி உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. 

இன்றைக்கு ஸ்டாலின்  உயர் மருத்துவமனைக்கு கருணாநிதி பெயரை சூட்டுகிறார், அதேபோல், சேலத்தில் எடப்பாடியார் உருவாக்கிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுகிறார். மதுரையில் நூலகத்திற்கு கருணாநிதி பெயரைசூட்டுகிறார். அதேபோல், கடலில் கருணாநிதி பெயரில் நினைவு சின்னம் அமைக்க முயற்சிக்கிறார். சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் கருணாநிதி பெயரில் அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.  இப்படியே சென்றால் தமிழ்நாடு என்னவாகும்? இதைப் பார்த்து மக்கள் முகம் சுளிக்கின்றனர்.

கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் திராவிட இயக்கத்தை தோற்றுவித்தார் அறிஞர் அண்ணா, அவரது பெயரை எந்த இடத்திலாவது ஸ்டாலின் சூட்டினாரா?

எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது புரட்சித்தலைவர் பெயரில் நூற்றாண்டு விழாவை நடத்தினார். அதில், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் பெயரை வைத்தார். மதுரை மாட்டுத்தாவணி நிலையத்திற்கு புரட்சித்தலைவர் பெயரை வைத்தார். இது தலைவருக்கு விசுவாசம் உள்ள தொண்டர் செய்யும் மரியாதை. ஆனால் ஸ்டாலின் செய்வது தந்தைக்கு மகன் ஆற்றும் கடமையாக உள்ளது.

ஒரு தலைவருக்கு தொண்டன் ஆற்றும் கடமையாக இருந்தால் ஸ்டாலின் அண்ணாவின் பெயர் சூட்ட வேண்டும். அண்ணா அறிவாலயத்தை கலைஞர் அறிவாலயமாக மாற்றிக் கொள்ளட்டும் யாரும் கேட்க மாட்டோம். மாநில சுயாட்சி கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டு திராவிட இயக்கத்தை ஆட்சிக்காட்டிலில் அமர்த்திய அண்ணா மற்றும் தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய புரட்சி தலைவரின் படம் வைக்கப்பட்டிருந்தது. அது அரசியல் காழ்புணர்ச்சியால் எடுக்கப்பட்டு, இதுவரை வைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எந்த பங்களிப்பும் திமுக செய்யவில்லை. ஆனால் பெயர் சூட்டு விழாவை மட்டும் செய்து வருகிறது . அறிஞர் அண்ணா சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று சூட்டினார். அந்த பெயரைக்கூட கருணாநிதி நாடு என்று மாற்றி விடாதீர்கள் என்று மக்கள் அச்சப்பட்டுள்ளனர். நெற்றியில்கூட கருணாநிதி பெயரைகூட ஒட்டி விடுவார்கள்.

இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் பேசினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்