கடந்த சில நாட்களாக ஐ. டி இண்டஸ்டீரில் பணியாளர்கள் வரிசையாக பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். இது பல முன்னணி நிறுவனங்கள் 1000 கணக்கான ஊழியர்களை தடாலடியாக நீக்கியது. அந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக வந்த செய்தி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனம் என்றால் நம் நினைவுக்கு வருவது கூகுள் தான். கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தில் தான் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த பணி நீக்கத்தின் காரணமாக கூகுள் தரப்பு, சாதகமற்ற சந்தை நிலவரம் மற்றும் நிறுவனத்தின் செலவைக் குறைக்கும் திட்டம் எனக் கூறுகிறது. இதில் வழக்கமாக பணிநீக்கம் செய்யப்படும் 2 சதவீதம் தற்போது 6 ஆக உயரக் கூடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குறைந்த செயல்திறன் கொண்ட ஊழியர்கள் எண்ணிகையை அதிகமாக்கும் படி கூகுள் மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ட்விட்டர், அமேசான், மெட்ட போன்ற நிறுவனங்கள் செலவைக் குறைக்க எடுக்கும் முயற்சி என்ற பெயரில் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்த யுக்கியை கையில் எடுக்கும் கூகுள் 10,000 ஊழியர்களைக் குறைந்த செயல்திறன் கொண்டவர்கள் எனவும் காட்டலாம் என்ற பயம் பரவி வருகிறது.
பொதுவாக மற்ற டிஜிட்டல் நிறுவனங்களை விட கூகுள் ஊழியர்கள் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. இங்கிலாந்து முதலீட்டாளர் ஹெட்ஜ் ஃபண்ட் பில்லியனர் கிறிஸ்டோபர் ஹோன் எழுதிய கடிதம் இந்த ஆட் குறைப்பை உறுடி செய்கிறது. எனவே, குறைவான செயல்திறன் கொண்ட பணியாளர்களை படிப்படியாக பணி நீக்கம் செய்ய உள்ளதாக வந்த தகவல் ஊழியர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…