Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இல்லாத பூனையை வீட்டுக்குள் தேடுவது போல் ஆளுநர் செயல்பாடு - அமைச்சர் விமர்சனம்

Baskarans Updated:
இல்லாத பூனையை வீட்டுக்குள் தேடுவது போல் ஆளுநர் செயல்பாடு - அமைச்சர் விமர்சனம்Representative Image.

சென்னை: இல்லாத பூனையை இருட்டு வீட்டுக்குள் தேடுவது போல ஆளுநர் செயல்படுவந்தாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில்  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும் போது, சட்டப்படி அமைச்சரை நியமிக்கவும்,நீக்கம் செய்யவும் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு விரிவான கடிதத்தை முதல்வர் இன்று எழுத உள்ளார்.

செந்தில் பாலாஜி தொடர்பான ஆளுநரின் உத்தரவுக்ளை நாங்கள் நிராகரிப்பதாகவும், முதல்வரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட அமைச்சரின் நியமனம் நீக்கம் விவகாரதில் ஆளுநர் அதிகார வரம்பு மீறி செயல்படுகிறார். இல்லாத பூனையை இருட்டு வீட்டுக்குள் தேடுவது போல ஆளுநர் செயல்படுவந்தாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆளுநரை இடித்துரைத்த பிறகு உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பதவி நீக்கம் செய்ய கூடிய அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது.முதல்வருக்கு தான் அதிகாரம் உள்ளது. செந்தில்பாலாஜியை மட்டும் தனிமைப்படுத்தி விசாரணை நடவடிக்கைகள் எடுப்பது ஏன்?என்றும் கேள்வும் எழுப்பினார்.

மலை இலக்கனால் யார் வேண்டுமானாலும் அம்பை எய்தலாம் எனும் நோக்கில் எதிர் கட்சியினர்  மட்டுமல்லாமல் ஆளுநரும் திமுக வினர் மீதான தாக்குதலில் ஈட்டுப்பட்டு வருவதாக கூறினார்.மத்திய அமைச்சர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் அமைச்சர்களாக தொடர்கின்றனர்.ஆளுநர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக செந்தில் பாலாஜி மீதான இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்.

மேலும் திமுக இதுபோன்ற விவகாரங்களை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளும் எனவும், எந்த ஆயுத்தை எப்போது எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இந்த மோதல் போக்கை ஆரம்பித்து வைத்தது ஆளுநர் தான் எனவும் குறிப்பிட்டார்,.இதனை தொடர்ந்து எந்தெந்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என்பதை முதல்வர் முடிவு செய்வார் எனவும் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக முதலமைச்சர் முடிவு செய்வார் எனவும் கூறினார்..

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, செந்தில் பாலாஜி இலாக இல்லாத அமைச்சராக தொடர்கிறார் எனவும் விசாரணைக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் வில்சன், அரசியல் அமைப்பு சட்ட சரத்துக்களை பின்பற்றாமல் செயல்படும் ஆளுநரின் இது போன்ற செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட வேண்டியவை.செந்தில்பாலாஜி வழக்கு விசாரணையில் தான் இருக்கிறார் குற்றவாளி என்று எங்கேயும் உறுதியாகவில்லை.

பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.இதை இப்படியே விட்டால் நாளைக்கே நீதிபதியை பதவி நீக்கம் செய்கிறேன் என்று கூட ஆளுநர் சொல்லலாம் என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்