Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,677.13
-195.16sensex(-0.26%)
நிஃப்டி22,356.30
-49.30sensex(-0.22%)
USD
81.57
Exclusive

Tamil Nadu Day 2022: தமிழ்நாடு தினம் - தமிழ்நாடு பிறந்த கதை...

Nandhinipriya Ganeshan July 16, 2022 & 14:00 [IST]
Tamil Nadu Day 2022: தமிழ்நாடு தினம் - தமிழ்நாடு பிறந்த கதை...Representative Image.

Tamil Nadu Day 2022: அற்புதங்களாலும், ஆச்சர்யங்களாலும் நிறைந்த அழகு கொஞ்சும் நம் தமிழக பாரம்பரியத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. மெய்சிலிர்க்க வைக்கும் சிற்பக்கலை, எக்காலத்திற்கும் அழியாத கலைநயம், பிரம்மிக்க வைக்கும் வீரம் என நம் தமிழ் மக்களின் பெருமையை அடுக்கிக்கொண்டே போகலாம். இது ஒருபக்கம் இருந்தாலும் உயரமான மலைகள், மலைக்குன்றுகள், அடர்ந்த காடுகள், ஆறு என இயற்கை வளங்களிலும் குறைந்தது கிடையாது நம் தமிழ்நாடு. விவசாயத்தின் ஆணிவேறாக திகழ்ந்தவர்கள் நம் தமிழர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக தாய்மொழியின் சிறப்பால் உயர்ந்து நிற்கின்றோம். இவ்வாறு தமிழ்நாட்டை புகழ்வதற்கு காரணமாக இருந்த நம் நாட்டு மக்களின் போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் அளவே இல்லை. நாம் தற்போது “தமிழ்நாடு” என கம்பீரமாக சொல்ல காரணமாக இருந்தவர்கள் நமது நாட்டின் ஞானிகளுமே, தியாகிகளுமே. இப்போது, நம் தமிழ்நாடு எப்படி உருவானது என்ற கதையை தான் பார்க்கப்போகிறோம்.

நம்ம நாட்டுக்கு பெருமை சேர்த்த இடங்கள்… இந்த இடத்துக்கெல்லாம் நீங்க போயிருக்கீங்களா?

தமிழ்நாடு உருவான கதை:

தமிழ்நாடு என்று கம்பீரமாக சொல்கிறோம், ஆனால் இதற்குபின் பல போராட்டமும், தியாங்களும், சோகங்களும் மறைந்திருக்கின்றன. இந்திய விடுதலைக்குப் பிறகு சுதந்திர இந்தியா சந்தித்த மிக முக்கியமான பிரச்சனை மொழிவாரியாக மாநிலங்களை பிரித்தது தான்.

அந்தவகையில், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற சில பகுதிகள் பிரிந்து சென்றன. எல்லா மாநிலங்களுக்கும் அந்தந்த மாநிலத்தவர் விரும்பிய பெயரே சூட்டப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டிற்கு மட்டும் ‘மெட்ராஸ் மாகாணம்’ என்ற பெயரே இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டிற்காக இறந்தவர்: 

பின்னர், சங்கரலிங்கனார் என்பவர் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை தியாகம் செய்தார். இதனால் போராட்டம் மேலும் வலுப்பெற்றது. கடைசியாக 1969 ஆம் ஆண்டு தை 14 ஆம் தேதி “தமிழ்நாடு” என அதிகார பூர்வமாக பெயர் மாற்றப்பட்டது.

தமிழ்நாடு தினம்:

‘மெட்ராஸ் மாகாணம்’ என்று இருந்த நம் மாநிலத்தின் பெயரை ‘தமிழ் நாடு’ என்று மொழி சார்ந்த பெயரை வைத்தவர் அறிஞர் அண்ணா. அதன்பின், அன்றிலிருந்து தமிழ்நாடு என அனைவராலும் அழைக்கப்பட்டன. இதை கொண்டாடும் விதமாக 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.

ஆனால் பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து வந்த வலிவுறுத்தல்களின் பேரில் ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டும் என்று கடந்த வருடம் ஆணை பிறக்கப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில், இனி ஒவ்வொரு வருடனும் ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாட அரசு அறிவித்துள்ளது. இப்படி தாங்க நம்ம தமிழகம் பிறந்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்