Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நம்ம நாட்டுக்கு பெருமை சேர்த்த இடங்கள்… இந்த இடத்துக்கெல்லாம் நீங்க போயிருக்கீங்களா? | Top 10 Highest Statues in Tamil Nadu

Nandhinipriya Ganeshan April 16, 2022 & 16:05 [IST]
நம்ம நாட்டுக்கு பெருமை சேர்த்த இடங்கள்… இந்த இடத்துக்கெல்லாம் நீங்க போயிருக்கீங்களா? | Top 10 Highest Statues in Tamil NaduRepresentative Image.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. மற்ற நாடுகளில் உள்ள சிலை அழகும், கலைநயத்தையும் பாராட்டும் நாம். ஏன் நம் நாட்டின் பெருமையை வெளி உலகிற்கு தெரியப்படுத்த மறந்துவிடுகிறோம். வாங்க! நம்ம நாடும் மற்ற நாடுகளுக்கு சலித்ததில்லை என்பதற்கு ஏற்ப வீரம் நிறைந்த தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் மிக உயரமான சிலை (Top 10 Highest Statues in Tamilnadu) அழகை உலகிற்கு காண்பிப்போம்…

10. நாமக்கல் ஆஞ்சநேயர் சிலை

நம்ம தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் என்றால் அது நாமக்கல்லில் உள்ள இந்த ஆஞ்சநேயர் கோயில் தான். சுற்றுலாப் பயணிகளும், புனித பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலாகும். 1500 ஆண்டுகள் பழமையான இக்கோயில் நாமக்கல் மலைக்கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை (namakkal anjaneyar statue) மிகவும் பிரம்மாண்டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டது. இந்த சிலை ஒரே கல்லால் கட்டப்பட்டது என்பது தான் தனிச்சிறப்பு

சிலையின் உயரம்: 18 அடி

இடம்: நாமக்கல், தமிழ்நாடு

9. ஊட்டி முருகன் சிலை

மலேசியாவில் உள்ள முருகன் சிலையை போன்றே ஊட்டி எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 40 அடி உயர கொண்ட முருகன் சிலை (Ooty murugan statue) அமைக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த முருகன் சிலையானது தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் பெரிய முருகன் சிலையாகும். இதுதான் இந்தியாவிலேயே உயரமான முருகன் சிலை என்ற பெருமையும் உண்டு. ஆனால், 2022 ஆம் ஆண்டு சேலத்தில் கட்டப்பட்ட முருகன் சிலை அந்த பெருமையை தட்டி சென்றுவிட்டது.

சிலையின் உயரம்: 40 அடி

இடம்: ஊட்டி, தமிழ்நாடு

8. தூத்துக்குடி வெக்காளியம்மன் சிலை

தூத்துக்குடி மாவட்டம், சிந்தலக்கரையில் அமைக்கப்பட்டுள்ள 42 அடி உயரம் கொண்ட ஸ்ரீ வெக்காளியம்மன் (vekkaliamman statue) நின்ற திருக் கோலத்தில் தரிசனம் தருகிறாள். தசபுஜங்களுடன் கூடிய அழகான திருமேனியையும், 8 கரங்களில் ஆயுதங்கள் எந்தியும், மற்ற இரு கரங்களில் அபய அரத முத்திரைகள் கொண்டும் காட்சியளிக்கிறது இப்பிரம்மாண்ட சிலை.

சிலையின் உயரம்: 42 அடி

இடம்: சிந்தலக்கரை, தூத்துக்குடி

7. திண்டுக்கல் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் சிலை

ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திண்டுக்கல் மாவட்டம், வேடசெந்தூர் தாலுகாவில் இருந்து 5 கி.மீ தொலைவில் பழனி செல்லும் வழியில் சேனன்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சன்னதியின் உள்ளே, ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் (Shri Bhaktha Anjaneyar)இடது கையில் பெரிய கடாவுடன் அழகான தோற்றத்துடன் நிறுவப்பட்டுள்ளார். மேலும், கோவிலில் உள்ள சமாதி போன்ற சன்னதிக்கு மேலே சுமார் 51 அடி உயரமுள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயரின் உயரமான சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. இந்த விநோதமான ஈர்ப்பு தமிழகம் முழுவதிலும் தனித்துவமாக உள்ளது. ஸ்ரீ பக்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்த பிறகு, தங்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் ஆசிகளைப் பெற, அவர்கள் மிகுந்த பக்தியுடன் அவரை வணங்குகிறார்கள்.

சிலையின் உயரம்: 51 அடி

இடம்: வேடசெந்தூர், திண்டுக்கல்

Most Read: Highest Statue in India: பாரதத்தின் பிரமாண்டமான 10 சிலைகள்!.. கோடை சுற்றுலா ஸ்தலம்!…. 

5. சேலம் வீர ஆஞ்சநேயர் சிலை

சேலம் மாவட்டம், அரியானூர் பகுதியில் உள்ள கஞ்சமலை அடிவாரத்தில் 77 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள வீர ஆஞ்சநேயர் சிலை (veera anjaneyar statue) தமிழ்நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய உயரமான சிலை என்ற பெயரைப் பெற்றுள்ளது.

சிலையின் உயரம்: 77 அடி

இடம்: அரியானூர் கஞ்சமலை, சேலம்

4. புதுக்கோட்டை சிவன் சிலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த கீரமங்கலம் நகரத்தில் கீரமங்கலம் மெய்நின்றநாதர் கோயில் அமைந்துள்ளது. அக்கோயிலின் முன்புறமுள்ள குளத்தின் நடுவே நின்ற கோலத்தில் சிவபெருமானின் சிலை (pudukkottai sivan statue) அமைக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு 81 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையானது தமிழ்நாட்டில் அமைந்துள்ள மிகப்பெரிய சிலைகளில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.

சிலையின் உயரம்: 81 அடி

இடம்: கீரமங்கலம், புதுக்கோட்டை

3. கோவை ஆதியோகி சிவன் சிலை

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிவன் சிலை (Adiyogi Shiva Statue) தமிழ்நாட்டின் மூன்றாவது மிக உயரமான சிலை என பெயர் பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இச்சிலை உலகிலேயே மிகப்பெரிய மார்பளவுச் சிலையின் அளவு - உயரம் 34.24 மீட்டர் 112 அடி 4 அங்குலம். அகலம் 24.99 மீட்டர் 81 அடி 11.8 அங்குலம். நீளம் 44.9 மீட்டர் 147 அடி 3.7 அங்குலம் கொண்டது. மேலும், இச்சிலை ’உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலை’ (biggest shiva statue in tamilnadu) என்ற அங்கீகாரத்தை பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

சிலையின் உயரம்: 112 அடி

இடம்: ஈஷா யோகா மையம், கோவை

2. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நடுக்கடலில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை (Thiruvalluvar Statue) கன்னியாகுமரியின் முக்கிய அடையாளங்களின் ஒன்று. இச்சிலை விவேகானந்தர் பாறைக்கு அடுத்து நிறுவப்பட்டிருக்கிறது. உலக பொதுமறையை தமிழுக்கு கொடுத்த அய்யன் திருவள்ளுவரின் சிலை ஜனவரி 1ம் தேதி 2000 ம் ஆண்டு கடலின் நடுவே உள்ள நீர்மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைக்கப்பட்டுள்ளது. 7000 டன் எடை கொண்ட இந்த சிலை 3681 மிகப்பெரிய கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 38 அடி உயரத்தில் இதன் பீடமும், 95 அதிகாரங்களைக் கொண்ட பொருட்பால் மற்றும் இன்பத்துப்பாலை குறிக்கும் வகையில் 95 அடி உயரத்தில் சிலையும் அமைக்கப்பட்டது. திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் சிலை 133 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 6.14 கோடி செலவில் கட்டப்பட்ட இச்சிலையானது தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய சிலை என்ற பெயரை பெற்றுள்ளது.

சிலையின் உயரம்: 133 அடி

இடம்: கன்னியாகுமரி, தமிழ்நாடு

1. சேலம் முத்துமலை முருகன் சிலை

நம்ம தமிழ்நாட்டிலேயே மிக உயரமான சிலை என்றால் 2022 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழைப்பாடியில் கட்டப்பட்ட "முத்துமலை முருகன் சிலை" (Salem Muthumalai Murugan Statue) தான். இது மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 6 அடி உயரம் கொண்டவை. மேலும், இந்த சிலை தான் உலகின் உயரமான முருகன் சிலை என்ற பெயரை பெற்றுள்ளது. சுமார் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வசீகரிக்கும் சிரித்த முகத்துடன், இடது கையில் வேலை பிடிப்பது போன்றும், வலது கை அபயஹஸ்த முத்திரையுடன் ஆசீர்வதிப்பது போன்றும் மணிமகுடம் சூடிய நிலையில் ஆடை அணிகலன்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் முத்துமலை முருகன் (biggest murugan statue in tamilnadu).

சிலையின் உயரம்: 146 அடி

இடம்: வாழைப்பாடி, சேலம், தமிழ்நாடு

Most Read: Worlds Highest Statue: அம்மாடியோ! உலகத்துலயே பெரிய சிலை இந்த சிலையா? அன்னாந்து பாத்தா கழுத்தே வலிக்கும் போலயே!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்