Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே.....இன்று சர்வதேச முத்த தினம்..!

madhankumar July 06, 2022 & 10:37 [IST]
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே.....இன்று சர்வதேச முத்த தினம்..!Representative Image.

உலகம் முழுவது ஜூலை 6 ஆம் தேதி சர்வதேச முத்த தினம் கொண்டாடப்படுகிறது. முத்தம் என்பது அன்பை பரிமாறும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் முத்தம் கொடுப்பவரும் சரி முத்தம் வாங்குபவரும் சரி மகிழ்ச்சியான உணர்வையே பெறுகின்றனர்.

முத்தத்தை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் பல பாடல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் முக்கியமாக கன்னத்தில் முத்தமிட்டாள், கன்னத்தில் முத்தத்தின் ஈரம், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, இத்துனுண்டு முத்தத்தில இஷ்டம் இருக்கா... இல்ல இங்கிலிஷு முத்தத்தில கஷ்டம் இருக்கா, என்ற பாடல்கள் காலத்தால் அழியாதவையாகும்.

முத்த பரிமாற்றத்தினால் சில நோய்கள் குணமாகும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். கன்னத்தில், நெற்றியில், உதட்டில் என பல இடங்களில் கொடுக்கப்படும் முத்தத்திற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. முத்தங்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சுவற்றை இங்கே பார்க்கலாம்....

உதட்டில் முத்தம்:

காதலர்கள் பெரும்பாலும் உதட்டில் தான் முத்தம் கொடுத்து கொள்வார்கள். அதற்கு அர்த்தம் என் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் இருப்பேன் என்று அர்த்தமாம்.

கைகளில் முத்தம்:

கைகளில் முத்தம் கொடுத்தால் அவர் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தமாம்..

நெற்றியில் முத்தம்:

நெற்றியில் முத்தமிட்டாள் உன் அன்பு எனக்கு வாழ்நாள் முழுவதும் வேண்டும் என அர்த்தமாம்...

மூக்கில் முத்தம்:

மூக்கில் முத்தம் கொடுத்த்தால் நீ மிகவும் அழகாக இருக்கிறாய், உன்னை விட இந்த உலகில் யாரும் அழகில்லை என கூறுவதால்..

கண்களை திறந்து முத்தம்:

முத்தத்தை கொடுக்கும் போது, கண்களை திறந்து வைத்துக் கொண்டு கொடுத்தால் உங்கள் துணை இன்னும் சந்தோஷப்பட வைக்குமாம். மேலும், உங்களது உணர்ச்சியை உங்களது துணை ரசிக்கிறார் என்று அர்த்தம்.

கண்களை மூடி முத்தம்:

காதலர்கள் இருவரும் கண்களை மூடிக் கொண்டே உதட்டோடு உதடு முத்தம்கொடுத்தால், இருவரும் அந்த தருணத்தை ரசித்து கொடுக்கிறீர்கள் என்று அர்த்தமாம்.

கன்னத்தில் முத்தம்:

கன்னத்தில் முத்தமிட்டாள் நான் உங்களுடன் எப்போதும் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.

கண்களில் முத்தம்:

கண்களின் மேல் முத்தம் கொடுத்தால், அதற்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.

நல்ல ஹார்மோன்கள் சுரக்கும்:

முத்தம் கொடுக்கும் பொது நமது உடலில் நல்ல விதமாக ஹார்மோன்கள் சுரக்கும். குறிப்பாக ஆக்ஸிடோசின், டோபாமைன் போன்ற நல்ல உணர்வை தரும் ஹார்மோன்கள் சுரக்கும். இது நமது உடலை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். 

மன அழுத்தம் குறையும்:

ஆண் பெண் ஒருவருக்கொருவர் முத்தங்களை பரிமாறிக்கொள்வதால் மன அழுத்தம் குறையும். இது தெடர்பாக பல்கலைக்கழகம் ஒன்று 2009இல் நடத்திய ஆய்வில் முத்தம் கொடுப்பதன் மூலம் நமது உடலில் மனஅழுத்தை ஏற்படுத்தும் கார்டோசால் அளவு உடம்பில் குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. 

முகத்தின் தசைகளுக்கு வலு தரும்:

ஒருவர் முத்தத்தை பரிமாறும்போது தனது முகத்தில் உள்ள 34 தசைகளையும் பயன்படுத்த வேண்டும். எனவே முகத்தில் உள்ள தசைகள் வலுப்பெறும். அத்துடன் முகம் பொலிவுடன் வயதாகாமல் இருக்கவும் இந்த தசைகள் சரியாக இருந்தால் உதவும்.

உடம்பில் கலோரிகள் எரிக்கும்:

ஒரு நிமிடம் வரை முத்தம் கொடுக்கும் போது முக தசைகளை நாம் பயன்படுத்துவதால் 2 முதல் 26 கலோரிகள் வரை நம்மால் எரிக்க முடியும். இது உடலுக்கு நல்ல சிறிய வோர்க் அவுட் ஆக அமைகிறது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்