Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிற்பி திட்டத்தின் மூலம் 3 விருதுகளை வென்ற பள்ளி மாணவர்கள் - இணைய ஆணையர் சாமுண்டீஸ்வரி பெருமிதம்

Saraswathi Updated:
சிற்பி திட்டத்தின் மூலம் 3 விருதுகளை வென்ற பள்ளி மாணவர்கள் - இணைய ஆணையர் சாமுண்டீஸ்வரி பெருமிதம் Representative Image.

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட 'சிற்பி' திட்டத்தின்மூலம் பள்ளி மாணவர்கள் மூன்று விருதுகள் பெற்றுள்ளதாக இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி தெரிவித்துள்ளர். 

சென்னை வேப்பேரி, காவல் ஆணையரங்கத்தில் சிற்பி திட்டத்தின் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.அதில் மாணவர்களின் சாதனையை விளக்கும் புகைப்படங்களும்  திரையிட்டப்பட்டது. பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் 'சிற்பி' என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு  தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்கீழ் சென்னையில் உள்ள 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு  தனி சீருடை வழங்கப்பட்டதோடுசுற்றுலா அழைத்துச் செல்லுதல், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் திறன்களை மேம்படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய இணை ஆணையர் சாமுண்டீஸ்வரிசிற்பி திட்டம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள், கல்வி சுற்றுலா அழைத்துச் சென்றது மற்றும் உலக சாதனை பட்டங்கள் பெற்றது உள்ளிட்ட சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார்.

சிற்பி திட்டத்தின் மூலம் 3 விருதுகளை வென்ற பள்ளி மாணவர்கள் - இணைய ஆணையர் சாமுண்டீஸ்வரி பெருமிதம் Representative Image

தொடர்ந்து பேசிய அவர், இந்த சிற்பி திட்டத்தின் கீழ்  மாணவர்களிடம் தரமற்ற உணவுகள் உட்கொள்வதில்  உடலுக்கு வரும் தீமைகள் தொடர்பான பாடங்கள் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு லஸ்ஸி , பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்பட்டது.  இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை மாணவர்களை சந்தித்து விண்வெளி தொடர்பான பாடங்களை நடத்தினார். ஒரு வாரத்திற்கு ஒரு முறை பள்ளிக்கு 2 சிற்பி ஆசிரியர் என 200 ஆசிரியர்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது.

மாணவர்களிடம் சுகாதாரம், இயற்கை விவசாயம் குறித்தான பாடங்கள் கற்பிக்கப்பட்டது.  சிற்பி திட்டத்தில் 8 சிறப்பு சுற்றுலாக்களுக்கு  மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சிற்பி திட்டத்தின்கீழ் மாணவர்கள் 5 லட்சம் விதை பந்துகள் தயாரித்தனர். இந்த செயலுக்கு 3 விருதுகள் வழங்கப்பட்டு. அந்த விதை பந்துகள் காடுகளில் வனத்துறை உதவியுடன் தெளிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்