Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கள்ளச்சார விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..! - வேலூர் எஸ்.பி. எச்சரிக்கை!

Saraswathi Updated:
கள்ளச்சார விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..! - வேலூர் எஸ்.பி. எச்சரிக்கை!Representative Image.

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் சரக டிஐஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தின்  பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க கால்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. லேலூர் சரக  காவல்துறை துணைத் தலைவர் முனைவர் M.S.முத்துசாமி மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காளர்  N.மணிவண்ணன் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மற்றும் மாவட்ட தனிபடை போலீசார் ஆகியோர் அணைக்கட்டு அல்வேரி மலை மீது ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி கள்ளச்சாராயம் தொடர்பான குற்றச்செயல்கள் ஏதும் நடக்கிறதா எனச் சோதனை செய்தனர்.

கள்ளச்சார விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..! - வேலூர் எஸ்.பி. எச்சரிக்கை!Representative Image

அதுமட்டுமின்றிவேலூர் மாவட்டம் முழுவதும் 20 குழுக்களாக பிரிந்து மதுவிலக்கு சம்பந்தமான தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டது. அதில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 3050 லிட்டர் சாராய ஊரல்கள் மற்றும் 870 லிட்டர் நாட்டுச் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்து காவல்துறையினர் அழித்துள்ளனர்.

சட்டவிரோதமாக விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த  18 மதுபான பாட்டில்களும் இந்தச் சோதனையின்போது பிடிபட்டதோடுகள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்திய 2 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் இதுசூபான்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் சரக டிஐஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்