Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சனாதான தர்மத்தில் தீண்டாமை இருக்கிறது என கூறுவது அறியாமை: ஆளுநர் ஆர். என்.ரவி

Baskarans Updated:
சனாதான தர்மத்தில் தீண்டாமை இருக்கிறது என கூறுவது அறியாமை: ஆளுநர் ஆர். என்.ரவி Representative Image.

சென்னை: சனாதான தர்மத்தில் தீண்டாமை இருப்பதாக சிலர் சொல்வது அவர்களது அறியாமையை தான் காட்டுகிறது என  ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள, ராகவேந்திர மடத்தில் 50 ஆண்டு தின விழா கொண்டாட்டத்தில், புதிய மடத்தை  ஆளுநர் ஆர். என்.ரவி திறந்து வைத்தார். கூட்டத்தில் பேசிய ஆளுநர் ரவி, பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானது. இந்த பாரதத்தில் உருவானதுதான் சனாதன தர்மம் அது  பல தலைமுறைகளுக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சனாதன தர்மம் மனிதர்கள் இடையே ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை. சனாதான தர்மத்தில் தீண்டாமை இருப்பதாக சிலர் சொல்வது அவர்களது அறியாமையை தான் காட்டுகிறது சனாதனம் என்பது எல்லோரும் சமம் தான். இந்திய அரசின் அமைப்பில் சட்டத்திலேயே பாரதம் என்பது தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரதத்தில் நாம் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாகத்தான் வாழ்ந்து வந்தோம். ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்திற்கு வந்த பிறகு தான் சிறந்த மொழி ஆங்கிலம் என்று கூறி வந்தனர். இந்த பூமி முனிவர்களாலும் ரிஷிகளாலும் உருவானது.

 சமஸ்கிருதம் தமிழும் மிகவும் தொன்மையான மொழியாகும் இதில் பல்வேறு இலக்கியங்களும் ஆன்மீக தகவல்களும் நமது பாரம்பரிய கலாச்சாரம்,  ஆன்மீகம் ஆகியவை தமிழ் சமஸ்கிருத இலக்கியங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன மகாகவி பாரதி பாரதம் என்று கூறியுள்ளார்.

சமூக ஒற்றுமை தீண்டாமை இல்லை என்பதையும் ராமானுஜர் சங்கரர், பத்வாச்சாரிய போன்ற ஆன்மீக குருக்கள் வலியுறுத்தியுள்ளனர். அருமையான அழகான சென்னை நகரத்தில் மிகச் சிறந்த ஆன்மீக தலைவர்களும் இலக்கியவாதிகளும் கல்வியாளர்களும் உருவாகி வாழ்ந்து வந்துள்ளனர்.

இவ்வளவு சிறப்பு மிக்க சென்னையில் தற்போது சாக்கடைகளும் கழிவு நீர்களும் ஆங்காங்கே காணப்படுகிறது  இதை சரி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். நாம் பல்வேறு தரப்பில் வேறுபட்டிருந்தாலும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்கிறோம். இன்னும் 25 ஆண்டுகளில் சனாதான தர்மம் தான் சிறந்தது என்று சிறந்தது என்று கூறப்படும் என தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்