Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குரங்கு கையில் பூமாலையாகிய ஆளுநர் பதவி..! - முரசொலி நாளிதழில் 'சிலந்தி' காட்டம்

Saraswathi Updated:
குரங்கு கையில் பூமாலையாகிய ஆளுநர் பதவி..! - முரசொலி நாளிதழில் 'சிலந்தி' காட்டம் Representative Image.

தமிழகத்தில் ஆளுநர் பதவியை குரங்கு கை கிடைத்த பூமாலையாக ஆளுநர் ஆர்.என். ரவி ஆக்கிவிட்டதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியாகியுள்ள சிலந்தி பக்கக் கட்டுரையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  

தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்.ரவி இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்துவருகிறது. செந்தில்பாலாஜி பதவி நீக்க விவகாரத்தில் இந்த மோதல் மேலும் அதிகரித்தது. இந்நிலையில், ஆளுநரையும், அவரது நடவடிக்கைகளையும் விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது.

முரசொலியில் இடம்பெற்றுள்ள சிலந்தி பக்கக் கட்டுரையில், 'பாஜகவின் ஆட்சியில் இந்திய ஜனநாயகத்தின் உயிர் உலக நாடுகளால் விமர்சிக்கப்படும் அளவு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.  'உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு' என்ற பெருமையை சுக்கு நூறாக்க அத்தனை நடவடிக்கைகளிலும் இறங்கி விட்டது. 

அரசியல் சட்டத்தின் அரிச்சுவடியைக்கூட அறியாத ஒரு நபர், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டு, அவர் நடத்தும் 'கத்துக்குட்டி அரசியல்' அத்துமீறிக் கொண்டிருக்கிறது. ஆளுநர் நினைத்தால் அமைச்சரை நீக்கலாம் என்றால், அதேநிலை தானே முதலமைச்சருக்கும்? பின் எதற்கு நாட்டில் தேர்தல், மக்கள் தேர்ந்தெடுக்கும் அவர்களது பிரதிநிதிகள்?

 ஒரு ஆளுநரை வைத்து முதலமைச்சரையோ, அமைச்சர்களையோ பதவி நீக்கம் செய்யலாம் என்று அரசியல் சட்டம் விதி வகுத்திருக்குமானால், இந்நேரம் மத்திய அரசுக்கும் மோடி, அமித்ஷா கூட்டத்துக்கும் பிடிக்காத மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், பினராயி விஜயன், சித்தராமையா போன்ற முதலமைச்சர்களின் ஆட்சியைக் கவிழ்த்து சூறையாடியிருக்காதா மத்திய பாஜக அரசு.

 சுயபுத்தி இல்லாத பேர்வழிகளுக்கு சொல்புத்தியாவது இருக்க வேண்டும் என்பார்கள். இரண்டும் இல்லாத இரண்டாம் கெட்டான்களை ஆளுநர்களாக நியமித்து, ஜனநாயகப் படுகொலைகள் நடத்தப்படுவதை மற்றைய ஜனநாயக நாடுகள் கண்டால் இந்தியாவைப் பற்றி என்ன நினைக்கும்?“குரங்கு கை பூமாலை" என்பார்களே, ஆளுநர் ரவியையும், அவரது கையிலே சிக்கியுள்ள ஆளுநர் பதவியையும் பார்க்கும்போது  அதுதான் நினைவுக்கு வருகிறது. இவ்வாறு பாஜக அரசு குறித்தும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும் அந்தக் கட்டுரையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்