Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராகுல் காந்தியுடன் கமல் நடத்திய ரகசிய ஆலோசனை; திமுகவுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்!

KANIMOZHI Updated:
ராகுல் காந்தியுடன் கமல் நடத்திய ரகசிய ஆலோசனை; திமுகவுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்!Representative Image.

தமிழகத்துல நாடாளுமன்றம், சட்டமன்றம், ஊராட்சியின்னு எல்லா தேர்தல்களையும் தன்னோட கூட்டணியோட எதிர்கொண்ட திமுக, வரப்போற நாடாளுமன்ற தேர்தல பலம் பொருத்திய பாஜகவை எதிர்த்து போட்டியிட எக்ஸ்ட்ராவா யாராவது கிடைப்பாங்களான்னு வலைவீசி தேடிக்கிட்டு இருந்துச்சி. அந்த சமயத்துல தான் விக்ரம் படம் மூலமா உதயநிதிக்கு கமல் கூட நெருங்கி பழகுற சான்ஸ் கிடைச்சிது. அதை பயன்படுத்திக்க நினைச்ச ஸ்டாலினும்,  உதயநிதிகிட்ட எப்படியாவது கமல நம்ப பக்கம் கூட்டிக்கிட்டு வந்துடு மகனே.. அப்படின்னு அன்புக்கட்டள போட்டிருக்கிறதா செய்திகள் வெளியாச்சு.. 

ஏற்கனவே நம்ப தமிழ்நாட்டுல ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கோம்... அப்படியே மநீமவோட ரெண்டரை சதவீத வாக்கும் கிடைச்சிட்டா எம்.பி. எலெக்‌ஷன்ல ஜெயிச்சிடலான்னு திமுக கனவு கண்டுகிட்டு இருக்க... சைடு கேப்பில புகுந்த ராகு காந்தி கமல டெல்லிக்கே தட்டித்தூக்கிட்டாரு. இரண்டு நாளைக்கு முன்னாடி டெல்லி போன கமல் அங்க ராகுல் காந்தியோட சேர்ந்து இந்தியாவின் ஒற்றுமை பயணத்துல கலந்துக்கிட்டாரு. இது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான்... இதுல தெரியாத விஷயம் என்னன்னா.... திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குறதால, கமலும், திமுக கூட்டணியிலேயே பயணிப்பதற்கான சமிக்ஞையாக இது பார்க்கப்பட்டுது. 

ஆனா அங்க தான் இருக்கு ட்விஸ்ட்டே... இந்த சந்திப்பு தொடர்பா மநீம வட்டாரங்கல கசிச்ச தகவலின் படி, வரப்போறது நாடாளுமன்ற தேர்தல் அப்படிங்கிறதால தேசிய கட்சியான காங்கிரஸ் கூட கூட்டணி வச்சிக்க கமலுக்கு ஓ.கே. தானாம். பாஜக எதிர்ப்பு, கொள்கை விஷயங்களையும் காங்கிரஸ் - கமல் கெமிஸ்ட்ரி நல்லா தான் ஒர்க் அவுட் ஆகுது. இருந்தாலும் நீங்க திமுக கூட கூட்டணி வச்சியிருக்கீங்களே அப்படின்னு ராகுல் காந்திகிட்ட கமல் கேட்டிருக்காரு. 

அதுக்கு ராகுல், திமுக அலையன்சில் இருந்து விலகுற யோசனை நமக்கில்ல. ஆனா அவங்களே அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை உருவாக்கினாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லைன்னு சொன்னதா தகவல் வெளியாகியிருக்கு. அதை கேட்டு குஷியான கமல், திமுக கூட காங்கிரஸ் கூட்டணி வச்சிக்கிட்ட நான் சேருறது டவுட்டு தான்... நீங்க தனியா நிக்கிறதா இருந்தா சொல்லுங்க யோசிப்போன்னு சொல்லியிருக்காரு. திமுகவோட சில நடவடிக்கையில காங்கிரஸ் அப்செட் ஆகியிருக்குற இந்த சமயத்துல, கமல் கொடுத்த ஆஃபரை ராகுல் காந்தி யோசிச்சி பார்த்து நல்ல முடிவு சொல்வாருன்னு மநீம தொண்டர்கள் காத்துக்கிட்டு இருக்காங்க. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்