Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காங்கிரஸில் கமல் ஹாசன்; முக்கிய புள்ளி சொன்ன பரபரப்பு தகவல்! 

KANIMOZHI Updated:
காங்கிரஸில் கமல் ஹாசன்; முக்கிய புள்ளி சொன்ன பரபரப்பு தகவல்! Representative Image.

காங்கிரஸ் கூட்டணியில் கமல் ஹாசன் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்தியாவின் ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் பங்கேற்றது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை உருவாக்கியது. இதனையடுத்து ராகுல் காந்தியை அவரது டெல்லி இல்லத்தில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கமல் ஹாசன் ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில் காங்கிரஸ் உடன் கமல் ஹாசன் கூட்டணி அமைக்க உள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில், அதனை காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் உறுதிபடுத்தியுள்ளார். சிவகங்கை நகரின் பல்வேறு பகுதியில் நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கட்சி கொடியை ஏற்றிவைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ராகுல் காந்தியின் நடைபயணம் மூலமாக மக்களின் கவனம் காங்கிரஸின் பக்கம் திரும்பியுள்ளதாக தெரிவித்த அவர், இதன் மூலம் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். தமிழக முதல்வர் பொங்கல் தொகுப்பில் கரும்பையும் வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கமல் ஹாசன் எங்கள் கூட்டனியில் இணைந்து வரும் தேர்தலில் போட்டியிட பிரகாசமான வாய்ப்புள்ளதாக கூறிய அவர், பாரத் ஜோடா யாத்திரை டெல்லியை அடையவிருந்தபோது கொரோனா பரவுகிறது என்கிற மத்திய அரசின் அறிவிப்பில் உள்நோக்கம் உள்ளது என கடுமையாக விமர்சித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்