Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிப்ரவரி 14 - காதலர் தினம்.! ஆனா இந்த இடத்துல எல்லாம் என்னனு சொல்லுவாங்க தெரியுமா..?

Gowthami Subramani Updated:
பிப்ரவரி 14 - காதலர் தினம்.! ஆனா இந்த இடத்துல எல்லாம் என்னனு சொல்லுவாங்க தெரியுமா..?Representative Image.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வந்தாலே முதலில் நம் நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலர்கள் தன் காதலை வெளிப்படுத்தும் விதமாகவும், காதலைப் புனிதப்படுத்தும் விதமாகவும் இந்த காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில், காதலர் தின கொண்டாட்டம் தொடங்கியதற்கான சான்றுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 

பிப்ரவரி 14 - காதலர் தினம்.! ஆனா இந்த இடத்துல எல்லாம் என்னனு சொல்லுவாங்க தெரியுமா..?Representative Image

வேலன்டைன் தினம்

ரோமாபுரி நாட்டின் இரண்டாம் மன்னரான கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில், இனி எவரும் திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார். மேலும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்திய சமயத்தில், அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாக திருமணங்களை நடத்தி வந்துள்ளார்.

இந்த விஷயத்தை அறிந்த் கொண்ட மன்னன், பாதிரியார் வால்ண்டைனை கைது செய்து அவருக்கு மரண தண்டனையை விதிப்பதாக தீர்ப்பளித்தார். இந்நிலையில் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும், வால்ண்டைனுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து சிறைக்காவலருக்குத் தெரிய வரப்பட்டு, அஸ்டோரியசை வீட்டு காவலில் வைத்தான். இந்த சமயத்தில் தான், வாலண்டைன், அஸ்டோரியசுக்கு தனது காதலை முதன் முதலாக காதல் வாழ்த்து அட்டை மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.

இந்த நேரத்தில், சிறையில் இருந்த வாலண்டைன் சிறையிலேயே மிகவும் அதிகமாக சித்தரவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே, வாலண்டைன் தனது தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவர் இறந்த நாள், கி.பி.270, பிப்ரவரி 14 ஆம் நாள் ஆகும். இந்த தினமே, வாலண்டைன் தினம் அதாவது, காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 14 - காதலர் தினம்.! ஆனா இந்த இடத்துல எல்லாம் என்னனு சொல்லுவாங்க தெரியுமா..?Representative Image

சீனர்களின் காதலர் தினம்

சீனர்களின் காதலர் தினமானது சிறிது சுவாரஸ்யமாக இருக்கும். சொர்க்கத்தில் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள் இருந்துள்ளனர். இதில், ஏழாவது மகளாக விளங்குபவர் ஸி நூ. இவளை அழகிகளுக்கெல்லாம் பேரழகி என்றே கூறுவர். ஒரு நாள் இந்த ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்துள்ளார். அப்போது குறும்புத் தனமாக அவர்களுடைய ஆடைகளை எடுத்துக் கொண்டு போய் விட்டான்.

இதனால், ஆடைகள் இல்லாமல் வெளியே வர முடியாமல் தவித்து கடைசியில் தங்களது கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்ட சொட்ட அவளைப் பார்த்த அவன், அவள் மீது காதல் கொண்டான். இந்த காதல் திருமணத்தில் முடிந்தது. இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட மன்னர், இருவரையும் பிரித்து, வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள், ஏழாவது மாதத்தில் ஏழாவது நாளில் மட்டுமே சந்தித்துக் கொள்ள முடியும். இந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினமாகக் கருதப்படுகிறது.
 

பிப்ரவரி 14 - காதலர் தினம்.! ஆனா இந்த இடத்துல எல்லாம் என்னனு சொல்லுவாங்க தெரியுமா..?Representative Image

இங்கிலாந்து காதலர் தினம்

கிழக்கு இங்கிலாந்து பகுதியில் உள்ள நார்போக் பகுதியில் காதலர் தினம் வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் காலத்தில், கிறிஸ்மஸ் தாத்தா வீடுகள்தோறும் சென்று பரிசுகள் தரும் வழக்கத்தை ஒத்திருப்பதாக இந்தக் கதை அமைகிறது. கிழக்கு இங்கிலாந்தில் இருப்பவர்கள் தங்களுக்குப் பிரியமானவரின் வீடுகளுக்குச் சென்று பின் வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்வர். இவ்வாறு இனிப்புகள் வைப்பவர்களை "ஜேக்" என அழைக்கின்றனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த இனிப்பை யார் வைத்தார்கள் என்று தெரியாமல் இருப்பர். இனிப்பை பயத்துடன் சாப்பிடுவார்கள்.

பிப்ரவரி 14 - காதலர் தினம்.! ஆனா இந்த இடத்துல எல்லாம் என்னனு சொல்லுவாங்க தெரியுமா..?Representative Image

ஸ்வீடன் காதலர் தினம்

ஸ்வீடன் நாட்டில் காதலர் தினத்தை அனைத்து இதயங்களின் தினம் என அழைப்பார்கள். போர்ச்சுக்கல் நாட்டில் காதலர் தினத்தை, "நமோரோடோஸ் டயாடாஸ்" என அழைப்பர். இதன் அர்த்தமே பாய் ஃப்ரண்டே, கேர்ள் ஃப்ரண்டே என அழைக்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டில் இந்த வேலண்டைனை செயின்ட் வேலண்டைன் என அழைக்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்