Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஈஷாவிற்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து; உயர் நீதிமன்றம் அதிரடி ஆணை!

KANIMOZHI Updated:
ஈஷாவிற்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து; உயர் நீதிமன்றம் அதிரடி ஆணை!Representative Image.

ஈஷாவுக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

மொத்தமுள்ள 4 லட்சம் ச.மீ. பரப்பளவு நிலத்தில் 1,25,000 ச.மீ. பரப்புக்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானத்திற்கு கல்வி நிலையங்களும் அமைந்துள்ளதாl விலக்கு பெற உரிமை  உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு  தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு கோவை ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்  கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த  நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும் என்றும், எனவே விலக்கு பெற உரிமை உள்ளதாகவும் கூறி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்  ஈஷாவிற்கு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்