Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாமன்னன் 2019 தேர்தலை நினைவுப்படுத்துகிறது: தொல்.திருமாவளவன்

Baskarans Updated:
மாமன்னன் 2019 தேர்தலை நினைவுப்படுத்துகிறது: தொல்.திருமாவளவன்Representative Image.

சென்னை: சாதி வெறிக்கும், சமூக நீதிக்குமான போரில் சமூக நீதி தான் ஜெயிக்கும் என மாரி செல்வராஜ் மாமன்னன் திரைப்படம் மூலம் தெரிவித்துள்ளதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 29ஆம் ரிலீஸாயானது. இந்த படத்தை பார்த்த பலரும் பலவிதமான கருத்துகளை முன்வைத்துள்ளனர். கதை களம் மேற்கு மாவட்டமான சேலத்தில் தொடங்குவதால், அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் சாயலில் கதை உள்ளதாகவும், அவரது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை உள்ளிடக்கி படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை உறுதி செய்யும் வகையில் படத்தில் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மாமன்னன் திரைப்படத்தை பார்த்தார். பின்னர் இதுக்குறித்து அவர் கூறுகையில், சானாதனத்தின் அடிப்படை கூறாக இருக்கின்ற பாகுபாட்டை படத்தின் கருபொருளாக எடுத்து சாதி வெறிக்கும், சமூக நீதிக்குமான போரில் சமூக நீதி தான் ஜெயிக்கும் என்பதை இயக்குநர் மாரிசெல்வராஜ் உணர்த்தியுள்ளார்.

நட்சத்திர சின்னம், தேர்தல் பின்னடைவு எல்லோரும் வென்றார்கள் என்ற அறிவிப்புக்கு பிறகு மாமன்னன் வெற்றி அறிவிப்பு என்பது 2019 சிதம்பரத்தில் என்னுடைய தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்பட்ட பதட்டத்தை நினைவுப்படுத்துகிறது. இமானுவேல் சேகரன் கூட அமர்ந்திருந்தால் தான் கொல்லப்பட்டார். இங்கே அமர்வதும், நிற்பதும் சாதியின் அடையாளங்களாக உள்ளன என்றார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்