Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஈகோவை காட்டும் நேரமா இது.. மம்தா பானர்ஜியால் எரிச்சலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளர்!!

Sekar July 22, 2022 & 19:10 [IST]
ஈகோவை காட்டும் நேரமா இது.. மம்தா பானர்ஜியால் எரிச்சலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளர்!!Representative Image.

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளரான மார்கரெட் ஆல்வா, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்த திரிணாமுல் காங்கிரசின் முடிவை விமர்சித்து, ஈகோ அல்லது கோபத்திற்கான நேரம் இது அல்ல என்று விளாசியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து, தனது கட்சியில் இருந்த யஷ்வந்த் சின்ஹாவை முன்னிறுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து 2024 தேர்தலில் மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்ள மம்தா பானர்ஜி இந்த முன்னெடுப்பை செய்ததாக பரவலாக பேசப்பட்டது. 

ஆனால் பின்னர் தடாலடியாக பாஜக திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது மம்தாவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. முர்முவை எதிர்த்தால் முதலுக்கே மோசம், தன் அரசியல் வாழ்க்கையே முடிந்து விடும் என்பதை அவர் உணர்ந்ததால், மெதுவாக யஷ்வந்த் சின்ஹாவை கழற்றி விட்டது.

பின்னர் தேர்தல் முடிந்து முர்மு ஜனாதிபதியாகவும் தேர்வாகிவிட்டார்.

இந்நிலையில், துணை குடியரசுத் தலைவர் தேர்தலில், இதே பார்முலாவை முன்னெடுத்த காங்கிரஸ் தனது கட்சியின் மார்கரெட் ஆல்வாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக்கியது. குடியரசுத் தேர்தலில் தடாலடியாக தொடங்கி பின்னர் ஜகா வாங்கியதால், மம்தா பானர்ஜியிடம் இந்த முறை துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கலந்தாலோசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

இதனால் தனது தலைமையில் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து மோடியை வீழ்த்தி பிரதமராகிவிடலாம் எனும் கனவில் இருந்த மம்தா பானர்ஜி மேலும் அதிர்ச்சியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தடாலடியாக துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கிறோம் என அறிவித்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா, திரிணாமுல் கட்சியின் இந்த முடிவு தனக்கு ஏமாற்றமளிக்கிறது என்றும், இது ஈகோ மற்றும் கோபத்தைக் காட்டுவதற்கான நேரம் அல்ல என்றும், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் தைரியமாக இருக்க வேண்டிய நேரம் என விளாசியுள்ளார். 

மேலும் தைரியத்திற்கு பெயர்போன மம்தா பானர்ஜி எதிர்கட்சிகளுடன் ஒன்றாக நிற்பார் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

ஆனால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு, இதற்குப் பிறகு மார்கரெட் ஆல்வாவை ஆதரித்தால், தனது அடையாளமான தைரியமும் துணிச்சலும் அடிவாங்கிவிடும் என்பதால் மம்தா இறங்கி வந்து ஆதரிக்க மாட்டார் என்பதே பெரும்பாலோரின் கருத்தாக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்