Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

"பொய் செய்தி பரப்புறதே பொழப்பா போச்சு" - அரசு விழாவில் அதிரடி காட்டிய மா.சு!

KANIMOZHI Updated:
Representative Image.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நலம் 365 எனும் யூடியூப் சேனலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.


இதில், மருத்துவத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில் குமார், தேசிய நல்வாழ்வு குழுமம் இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய, அமைச்சர் மா. சுப்பிரமணியன், சமூக வலைத்தளங்களில் ஒரு சில பேர் பொய்யான செய்திகளை பரப்புவதை தொழிலாக வைத்திருக்கிறார்கள். அதனை தடுக்கும் வகையில், மருத்துவத்துறை சார்பில் நலம் 365 எனும் யூடியூப் சேனல் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், மக்களின் உடல்நலம் குறித்த அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்யப்படும்.

இந்த யூடியூப் சேனலில் மாதத்தில் ஒரு நாள் மக்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சனை கேட்டறிந்து கலந்துரையாடல் செய்யவும், மருத்துவ துறை மீது பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த சேனல் உதவியாக இருக்கும். யோகா, மூச்சு பயிர்ச்சி மக்களுக்கு சொல்லி தரவும், உணவு பொருள்களின் அவசியம், அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய இந்த யூடியூப் சேனல் உதவியாக இருக்கும். எந்நேரமும் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இந்த சேனல் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் அமையும். இந்த சேனலில் விளம்பரம் ஏதும் வராது எனவும் பேசினார்.

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்