Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார்..! - அமைச்சர் பொன்முடி பேட்டி

Saraswathi Updated:
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார்..! - அமைச்சர் பொன்முடி பேட்டிRepresentative Image.

சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைதாகியுள்ள செந்தில்பாலாஜி, தமிழக அமைச்சராகத் தொடர்ந்து இருப்பார் என்றும், அவர் கவனித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைகள் இரண்டு அமைச்சர்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, "கடந்த 31.05.2023 அன்றே செந்தில் பாலாஜி மீது வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் கடிதம் எழுதி இருந்தார். அதற்கு சிங்கப்பூர், ஜப்பான் பயணம் முடிந்து திரும்பிய பிறகு கடந்த  01.06.2023 அன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் கடிதம் எழுதினார்.

அதில், அமைச்சர்கள் மீது வழக்கு நிலுவையில் இருக்கிற காரணத்தினால் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது.அப்படி பார்த்தால் பாஜகவினுடைய அமைச்சர் அமித்ஷா மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டாரா? மத்திய அமைச்சர்களின் 33 பேர் மீது வழக்குகள் இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வழக்குகள் உள்ள அமைச்சர்களை பதவி நீக்க வேண்டுமானால் ஆளுநர் பாஜகவிற்கு தான் முதலில் கடிதம் எழுத வேண்டும். அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதால், அவரிடம் உள்ள மின்சார துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு துறையை அமைச்சர் முத்துசாமியிடமும் கூடுதலாக ஒப்படைக்கிறோம் என முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

முதலமைச்சர் கூறுபவரைதான் ஆளுநர் அமைச்சராக நியமிப்பார். இலாகாக்கள் மாற்றுவதை முதலமைச்சர், ஆளுநருக்கு கடிதத்தின் மூலமாக தெரிவித்தார். ஆளுநரை கேட்டுவிட்டுதான் துறைகளை மாற்ற வேண்டும் என்பது இல்லை. அரசியலமைப்பு சட்டம் தெரிந்திருந்தால், ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளித்து இருப்பார். ஆனால், ஆளுநர் பதில் அனுப்பிய கடிதத்தில் Misleading and incorrect என குறிப்பிட்டுள்ளார். அது எந்த அளவிற்கு தவறானது என உங்களுக்கு தெரியாதது அல்ல.

விதிகளின்படி முதலமைச்சருக்கு உள்ள அதிகாரத்திலேயே துறையை மாற்றலாம் என சுட்டிக்காட்டி, மறுபடியும் முதமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதை ஆளுநர் ஏற்றுக் கொள்வார் என நினைக்கிறேன்.  அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படுகிறவராக முதலமைச்சர் இருக்கிறார். ஆனால், ஆளுநர் தேவையில்லாமல் முதலமைச்சர், தமிழக அரசின் அதிகாரங்களில் தலையிட்டு பாஜகவின் முகவரைப்போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பிஜேபியின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார். அவரிடம் இருந்த துறைகள் இரண்டு அமைச்சர்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்