Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 73,057.52
-342.26sensex(-0.47%)
நிஃப்டி22,183.75
-88.75sensex(-0.40%)
USD
81.57
Exclusive

சென்னையில் இடம் இல்லாததால் திருச்சியில் விளையாட்டு நகரம்…! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு..!

Gowthami Subramani October 06, 2022 & 17:30 [IST]
சென்னையில் இடம் இல்லாததால் திருச்சியில் விளையாட்டு நகரம்…! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு..!Representative Image.

சென்னையில் விளையாட்டு நகரம் அமையவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், சென்னையில் இடம் கிடைக்காததால் திருச்சியில் இடம் தேர்வு செய்யப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செய்து வருகிறது. இது மக்கள் மத்தியில், மிகுந்த வரவேற்பைப் பெற்றதாகவும், அவர்களுக்குப் பயனுள்ளதாகவும் அமைகிறது. அதே சமயம், விலைவாசி உயர்வு போன்றவற்றால், கடுமையான விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

அரசு செயல்படுத்திய திட்டங்களில், தற்போது விளையாட்டுத் துறை மேம்பாட்டிற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் படி, தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு முன்னரே அறிவித்திருந்தது.

இது குறித்து, விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்ரி வாகை சூட முடியும். அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் பல்வேறு உலகத் தரத்திலான விளையாட்டுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு விளையாட்டு நகரம் சென்னையில் அமைக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், சென்னையில் இடம் கிடைக்காத பட்சத்தில், வேறு இடங்களில் ஆய்வு செய்தும், இடத்தை தேர்வு செய்ய சிக்கல்கள் உள்ளது.

இதனால், சென்னையில் இடம் கிடைக்காத நிலையில், திருச்சியில் விளையாட்டு நகரம் அமைக்க திட்டமிடப்படும் எனவும், தஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப் பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட உள்ளதாகவும், இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்