Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இபிஎஸ்-க்கு எதிர்ப்பு....ஓபிஎஸ்-க்கு ஆதரவு....எம்.ஜி.ஆர். பேரன் அதிரடி....!

madhankumar June 29, 2022 & 15:46 [IST]
இபிஎஸ்-க்கு எதிர்ப்பு....ஓபிஎஸ்-க்கு ஆதரவு....எம்.ஜி.ஆர். பேரன் அதிரடி....!Representative Image.

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை நடந்துகொண்டிருக்கும் நிலையில் என்னுடைய பதவி பறிக்கப்பட்டாலும் எனது ஆதரவு எப்போதும் ஓபிஎஸ்-க்கு தான் என மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பேரன் ராமசந்திரன் கூறியுள்ளார்.

அதிமுகவில் பொதுக்குழு கூடுவதற்கு முன்னரே ஒற்றை தலைமை பிரச்னை உருவெடுத்தது, இதில் எடப்பாடி ஆதரவாளர்களும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மாறி மாறி கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து எதுவும் பேச கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவையும் மீறி ஒற்றை தலைமை கண்டிப்பாக வேண்டும் என எடப்பாடி தரப்பினர் கோஷம் எழுப்பினார், மேலும் ஓபிஎஸை கூட்டத்தில் இருந்து வெளியேறும்படி கோஷமிட்டனர். பின்னர் இது சட்டத்திற்கு புறம்பான கூட்டம் என கூறி ஓபிஎஸ் தரப்பு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து அடுத்த மாதம் 11 தேதி மீண்டும் பொது குழு கூட்டப்படும் அதில் ஒற்றை தலைமை குறித்து முடிவு செய்யப்படும் என எடப்பாடி தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை தனது இல்லத்தில் வைத்து சந்தித்த மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆர். அவர்களின் பேரன் ராமசந்திரன் ஒற்றை தலைமைதான் இடப்படிக்கு வேண்டுமென்றால் அவர் விலகி கொண்டு ஓபிஎஸை தலைமையேற்க விட வேண்டியதுதானே என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் பேசிய அவர் இந்த கட்சி இரண்டாக பிரிய கூடாது என எம்.ஜி.ஆர் நினைத்தார், இந்த கட்சியும் கொடியும் அவர் உருவாக்கியது அவருக்கு பின்னல் ஜெயலலிதா வழிநடத்தவேண்டும் என அவர் எண்ணினார். இந்த சூழ்நிலையில் எதற்கு ஒற்றை தலைமை வர வேண்டும் என நினைக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை என கூறினார். மேலும் பலர் என்னை சந்தித்து இது குறித்து நீங்கள் ஒரு முடிவு எடுங்கள் என கேட்டுக்கொண்டனர் என கூவினார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால், கட்சியை ஓ.பி.எஸ்யிடம் கொடுத்துவிட்டு ஒற்றை தலைமை ஏற்றுக்கொள்ள சொல்ல வேண்டும் என்றார். அண்மையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், வயதில் மூத்தவர், கட்சியில் மூத்தவர் என்று கூட பாராமல் ஓ.பி.எஸ்சை அவமானப்படுத்தியது தவறு என்றும், இதே சம்பவம் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடத்தாலும் நாங்கள் குரல் கொடுத்து இருப்போம் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் ஜெயலலிதா கொடுத்த பதவியை ஓ. பன்னிர்செல்வம் எந்த வகையிலும் ஏமாற்றாமல் நடந்துகொண்டார் அதனால் அவருக்கு இரண்டாவது முறையாக பதவியை கொடுத்தார் எனக்கூறினார். மேலும் தற்போது அனைவரும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படத்தை அனைத்து இடங்களிலும் போட்டுக் கொள்கிறீர்கள், ஆனால் அமைச்சர் பதவிகள் வாங்கியவர்கள்  எத்தனை முறை எம்.ஜி.ஆர்  இல்லத்திற்கு வந்துள்ளார்கள் என கேள்வி எழுப்பினார். ஆனால் ஓ.பி.எஸ், கொரோனா காலத்தில் கூட எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு வந்தார் என்றும், எடப்பாடி பழனிச்சாமி  இந்த இல்லத்திற்கு  வந்ததே இல்லை. எம்.ஜி.ஆர் பிறந்தநாள் மற்றும் நினைவு தினத்திற்கு மட்டும் போட்டி போட்டு சிலைக்கு மாலை போட செல்கிறார்கள் என்று பேசினார்.

மேலும் தன்னை எம்.ஜி.ஆர். பேரன் என மதித்தது ஓபிஎஸ் ஒருவர் மட்டும் தான் அதனால் எனது பதவி பறிபோனாலும் பரவாயில்லை எனது ஆதரவு ஓபிஎஸ்-க்கு மட்டும் தான் என அவர் கூறியுள்ளார். அதேபோல் தொண்டர்கள் ஆதரவும் ஓ.பி.எஸ்க்கு தான் உள்ளது என்றும், இரண்டு பேரும் இணைந்து தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்