Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இபிஎஸ் அணிக்கு செக்.. அடிமடியிலேயே கைவைக்கும் ஓபிஎஸ்.. பரபரப்பில் அதிமுக!!

Sekar June 29, 2022 & 15:14 [IST]
இபிஎஸ் அணிக்கு செக்.. அடிமடியிலேயே கைவைக்கும் ஓபிஎஸ்.. பரபரப்பில் அதிமுக!!Representative Image.

அதிமுக உட்கட்சி மோதல் உச்சம் பெற்று வரும் நிலையில், கொங்கு பகுதியில் இபிஎஸ்ஸால் ஓரம்கட்டப்பட்ட முன்னாள் எம்எல்ஏ, எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களை தனது பக்கம் இழுக்க ஓபிஎஸ் தீவிரமாக களமிறங்கி உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இபிஎஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஒற்றைத் தலைமை விவகாரத்தால் இருதரப்பும் முட்டிமோதி வருகிறது. இதில் இபிஎஸ் தரப்புக்கு ஆதராக அதிக நிர்வாகிகள் உள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாக வெகுசிலரே உள்ளதாகக் கூறப்படுகிறது.

நிர்வாகிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் கட்சியில் தனது அதிகாரத்தை தக்கவைக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதற்கிடையே கட்சியில் நிர்வாகிகள் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிக்க மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இந்த பயணத்தை முதற்கட்டமாக இபிஎஸ் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் இருந்தே தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொங்கு மண்டலத்தில் தொண்டர்களை சந்திப்பதோடு, இபிஎஸ் தரப்பால் புறக்கணிக்கப்புக்கு உள்ளான முன்னாள் எம்எல்ஏ, எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களை தங்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்கவும் ஓபிஎஸ் தரப்பு ரகசியமாக பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளததாக அதிமுக உள்வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதற்காக ஓபிஎஸ் அவரது மகன் ரவீந்திரநாத், வைத்தியலிங்கம், கோவை செல்வராஜ் ஆகியோரை களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்ட போது, கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை முதற்கட்டமாக தொடர்பு கொண்டு வருகின்றனர்.

அந்த சமயத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும், 24 முன்னாள் எம்எல்ஏக்கள், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளித்தனர். அதில் தற்போது இரண்டு பேர் காலமாகிவிட்ட நிலையில், மீதமுள்ள 22 பேரில், 18 பேர் இபிஎஸ் அணியில் உள்ளனர்.

எனினும் இவர்களின் மோதல் போக்கு பிடிக்காமல், நான்கு பேர் ஒதுங்கிக் கொண்டனர். தற்போது அவர்களை தனக்கு ஆதரவாக திருப்பி சேலம் மாவட்டத்தில் களம் இறக்க ஓபிஎஸ் தரப்பு முயன்று வருகிறது. இதற்காக, வைத்திலிங்கம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. 

மேலும் இதேபோல் கொங்கு மண்டலத்தில் உள்ள ஒவ்வோர் மாவட்டத்திலும், இபிஎஸ் அணிக்கு எதிரானவர்களை இனம் கண்டு ஆதரவு திரட்ட ஓபிஎஸ் தரப்பு முயல்வதை எப்படி எதிர்கொள்வது என இபிஎஸ் தரப்பு ஆலோசித்து வருவதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்