Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கூட்டணி குறித்து தேசிய தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது - பாஜக எம்எல்ஏ தகவல்!

Baskaran Updated:
கூட்டணி குறித்து தேசிய தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது - பாஜக எம்எல்ஏ தகவல்!Representative Image.

கோவை: எனது அலுவலகத்திற்குள் நுழைந்தவர் என்ன நோக்கத்திற்காக உள்ளே வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரிப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பா.ஜ.க  கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்த நன்மைகள் குறித்து மக்களிடம் எடுத்து சொல்லி வருகின்றோம் எனவும், மத்திய அரசின் திட்டத்தின் செயல்பாடுகளில் ஏதேனும் சுணக்கம் இருந்தால் அதை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்து பேசி சரி செய்வதுடன், புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். கோவை மாவட்ட பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய தபெதிகவினர் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது எனவும், இதை நாங்கள் வரவேற்கிறோம் எனவும் தெரிவித்தார். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை, பெட்ரோல் குண்டு வீசி ஒரு இயக்கத்தை மிரட்டி விட முடியாது என்பதற்கு பாஜக உதாரணமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

என்னுடைய அலுவலகத்திற்குள் நேற்று நுழைந்த நபர், அறையை உட்புறமாக பூட்ட முயன்று இருக்கின்றார், அந்த நபரை அலுவலகத்தில் இருந்த எனது உதவியாளர் வெளியேற்றி இருக்கின்றார் எனவும் தெரிவித்தார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும், அந்த நபர்  வாகனம் மோதி உயிரிழந்ததாக கேள்விபட்டதாகவும் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபர் யார், அவர் எந்த பின்னணியில் இருந்து  அலுவலகத்திற்கு நுழைந்தார், என்ன நோக்கம் என்பது குறித்து தெரியவில்லை எனவும்,  இதுகுறித்து காவல் ஆய்வாளரிடம் பேசியிருக்கிறோம், யார் அந்த நபர் என்பது குறித்தும், என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறார் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கூட்டணி தொடர்பான விஷயங்களில் அகில இந்திய தலைமை என்ன சொல்கின்றனரோ, அதற்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள் எனவும், கூட்டணி தொடர்பாக அதிமுகவினரின் விமர்சனமாக இருந்தாலும் அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். கூட்டணியை பற்றி பேச தேசிய தலைமைகள் இருக்கிறது எனவும், அவர்கள் சொல்வதை செய்ய நாங்கள் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்துவதற்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை எனவும், அவர்களுக்கு கிடைக்க கூடிய தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்துகிறார்கள், தவறுகள், முறைகேடுகள் இருந்தால் அதற்கான விசாரணைகளை சந்தித்து ஆக வேண்டும் என தெரிவித்தார். அதிமுகவுடன் ஏற்பட்டு இருக்கும் கருத்து மோதல் குறித்து நான் கருத்து சொல்ல விரும்புவதில்லை என தெரிவித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வோம் என்பது உறுதி எனவும் தெரிவித்தார்.

மல்யுத்த வீராங்கனை விவகாரத்தில் தவறு செய்திருந்தால் கட்சி நடவடிக்கை எடுக்காமல் இருக்காது, அதே நேரத்தில் அதற்கு அரசியல் உருவாக்கம் இருந்தால் அதையும் எதிர்கொள்ளும் என தெரிவித்தார். தமிழர் ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்பதில் சர்ச்சை இல்லை, தமிழ்நாட்டினுடைய பங்கும்  இருக்க வேண்டும் என்பதற்காக அது சொல்லப்பட்டது எனவும், பிரதமராகும்  தகுதி எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறது என்ற கருத்துக்கு பதில் சொல்ல விரும்ப வில்லை எனவும், இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் ஜெயித்து பிரதமராக வாய்ப்பு இருக்கிறது எனவும் தெரிவித்தார். 

எனக்கு ஒருபுறம் கட்சியின் மாநில தலைவர், அவருக்குரிய மரியாதை, அவர் கருத்துக்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும், இன்னொரு பக்கம் தேசிய தலைமை கூட்டணியை பற்றி முடிவு எடுக்கும் பொழுது அது தொடர்பாகவும், கூட்டணியை எடுத்துச் செல்லும் பங்கும் இருக்கிறது எனவும், எனவே இது போன்ற நேரங்களில் எந்த கருத்தும் கூறாமல் இருப்பதுதான் நல்லது என்பது  என் நிலைப்பாடு என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்