Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்...தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை..!

madhankumar May 22, 2022 & 13:17 [IST]
பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்...தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை..!Representative Image.

மத்திய அரசை போல தமிழகத்தில் திமுக அரசும் பெட்ரோல் வரியா குறைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் கூறியுள்ளதாவது நாடு முழுவதும் விலை வாசி உயர்ந்து வருகிறது பணவீக்கம் பெருமளவில் உயர்ந்துவருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் நலம் காக்கும் பொருட்டு மத்திய அரசு பெட்ரோளுக்கு வழங்கும் காலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு விதிக்கப்படும் காலால் வரியை லிட்டருக்கு 6ரூபாயும் குறைத்து உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம், ஒவ்வொரு மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரிக்கேற்ப, பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசு அளவுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் அளவுக்கும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இது போன்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல தமிழக முதல்வர் குறைந்தபட்சம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்க நடவடிக்கை எடுத்து ‘மக்களுக்கு நீதி’ வழங்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

 

இதையும் படிக்க:- Rain Alert News:உஷாராக இருங்க...!இன்னும் 5 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கனமழை! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை