Fri ,Feb 23, 2024

சென்செக்ஸ் 73,089.69
-68.55sensex(-0.09%)
நிஃப்டி22,196.65
-20.80sensex(-0.09%)
USD
81.57
Exclusive

பேஸ்புக் காதல் TO கல்யாணம்....இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி...!

madhankumar May 28, 2022 & 12:44 [IST]
பேஸ்புக் காதல் TO கல்யாணம்....இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி...!Representative Image.

திருமணங்களில் மணப்பெண் மாறிப்போவது மணமகன் மாறிப்போவது என பல செய்திகளை கேள்விப்பட்டிருப்போம் குறைந்தபட்சம் நேரிலாவது பார்த்திருப்போம். அனால் மேற்குவங்கத்தில் நடந்த இந்த சம்பவம் முற்றிலும் வித்தியாசமானது வாங்க அதுகுறித்து பார்க்கலாம்.

முகநூல் காதல்:

தற்போதைய காலகட்டத்தில் முகநூல் மூலம் நட்பாகி பின் காதலித்து அடுத்து திருமணம் செய்துகொள்ளும் நடைமுறை பரவலாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதில் இந்த காதல் திருமணமானது சற்று விசித்திரமானதுதான். மேற்கு வங்க மாநிலத்தின் நார்த் பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அலோக் குமார் மிஸ்ட்ரி. இவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஓடிசாவைச் சேர்ந்த மேக்னா மண்டல் என்பவருடன் முகநூலில் நட்பு ஏற்பட்டுள்ளது, நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. 

காதலில் ஊறிப்போயிருந்த அலோக் குமார் தான் உருகி உருகி காதலித்த மேக்னாவை திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் மிக தீவிரமாக செய்துவந்துள்ளார்.

திருமணம்:

கடந்த மே 24ஆம் தேதி அலோக் குமார் மேக்னாவை தன்னுடைய தாய்மாமா வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து இருவருக்கும் திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. சரி திருமணத்திற்குத்தான் யாரையும் அழைக்கவில்லை ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடைத்திவிடலாம் என முடிவு செய்த அலோக் குமார் தனது உறவினர்கள், மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைத்துள்ளார். 

இதையும் படிங்க: பாலியல் தொழிலாளர்களை கைது செய்ய கூடாது - சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

அப்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு நபர் மணப்பெண்ணை பார்த்து மேக்னாட் என ஆணின் பெயரை வைத்து அழைத்துள்ளார். இதனை கேட்ட அலோக் குமார் அதிர்ச்சியடைந்து நின்றார் அவர் மட்டுமல்ல அவரின் குடும்பத்தாரும் கூட. அதோடு நிறுத்தாமல் அந்த நபர் நீங்கள் திருமணம் செய்திருப்பது பெண் அல்ல ஒரு ஆண் என கூறியுள்ளார். அதனை கேட்ட அலோக் குமாருக்கு இதயம் ஒரு நிமிடம் நின்றுதான் போயிருக்க வேண்டும் காரணம் பல ஆசைகளுடன் தான் திருமணம் செய்தது ஒரு பெண்ணே இல்லை ஆண் என்றால் எவ்வாறு இருந்திருக்கும்.

இதையும் படிங்க: தனுஷ்-க்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நாயகி? எந்த படத்தில் தெரியுமா?

பின்னர் கோபத்தின் உச்சிக்கே சென்ற அலோக் குமார் குடும்பத்தினர், மணப்பெண் வேடத்தில் இருந்த மேக்னாட்டை அரை நிர்வாணப்படுத்தி போலந்து கட்டியுள்ளனர். அதன் பின் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்னர் நடந்த விசாரணையில் அந்த மேக்னாட் இது போன்று பல ஆண்களை ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல் விபரீதமாக மாறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நபர் வேறு யார் யாரெல்லாம் ஏமாற்றியுள்ளார் என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்