Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிமுகவை சாதி கட்சி ஆக்கிவிடாதீர்கள்...முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி!

madhankumar June 17, 2022 & 19:50 [IST]
அதிமுகவை சாதி கட்சி ஆக்கிவிடாதீர்கள்...முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி!Representative Image.

அதிமுகவை சாதிகட்சியாக மாற்றி விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ள அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் பொறுப்பில் இருந்து  ஒதுங்கிக்கொண்டு வேறு யாராவது ஒருவர் தலைமை பொறுப்பிற்கு வர வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.

கோவை விளாங்குறிச்சியில் உள்ள இல்லத்தில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  பேசியவர், “அதிமுக தொண்டனாக கருத்து சொல்கின்றேன் என தெரிவித்த அவர், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து இருக்கின்றோம். 

ஆட்சியில் இருந்தபோது பலமுறை உள்ளாட்சி தேர்தலை நடத்துங்கள் என கேட்டும் நடத்தாமல் வழக்கு இருக்கிறது என தட்டிக்கழித்தனர். அப்போதே உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருந்தால் தற்போது ஆட்சியை இழந்திருக்கமாட்டோம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தனித்தனியே பேட்டியும் கொடுத்திருக்கமாட்டார்கள் மேலும் இரு கோஷ்டியாக பிரித்து அதிமுக சண்டை போட்டுகொண்டு இருக்கின்றனர். இருவருமே விபத்தில் பதவிக்கு  வந்து விட்டனர். இப்போது தனித்தனியாக ஆட்களை சேர்த்துக் கொண்டு இருவரும் சண்டை போடுவது சரியில்லை என தெரிவித்தார்.

மேலும் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களை கேட்டு இவர்கள் எதுவும் செய்யவில்லை. உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருக்கும் வார்டுகளை கூட கைபற்ற முடியவில்லை. கோவையில் வேலுமணி வார்டில் 2000 ஓட்டு அதிகம் வாங்கி திமுக ஜெயித்து இருக்கின்றது.

ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக சாதிகட்சியாக போகின்றது. அதிமுகவினர் வேதனையில் இருக்கின்றனர். ஓ.பி.எஸ் , இ.பி.எஸ் இருவரும் ஒதுங்கிக்கொள்ளுங்கள், வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும் என தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்