Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும்..! -  முத்தரசன் வலியுறுத்தல்

Baskar Updated:
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும்..! -  முத்தரசன் வலியுறுத்தல்Representative Image.

வேலூர்: மேகதாது அணை கட்ட முயன்றால் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சி ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து  செயல்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டம் காட்பாடியில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் முத்தரசன் பேசியதாவது:

வேலூர் மாவட்டம் மக்களின் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில்வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள மேல் அரசம்பட்டு அணை மற்றும் பேரணாம்பட்டு அருகே பத்திரப்பள்ளி அணைகளை விரைந்து கட்ட வேண்டும். பாலாற்றில் நீராதாரத்தை பெருக்க தடுப்பணைகளை அமைக்க வேண்டும். 

வேலூர் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கவும் மேலும் ஒரு புதிய சிப்காட் தொழிற்பேட்டையை வேலூர் மாவட்டத்தில் அமைக்க கோரியும் கழிவுநீர் பாலாற்றிலும் ஏரியிலும் கலப்பதை தடுக்க வேண்டும். கர்நாடக அரசு காவிரி நதி நீர் ஆணையம் அறிவித்துள்ள படி தமிழகத்திற்குரிய நீர் பங்கீட்டினை உடனடியாக வழங்க வேண்டும்.

கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வர் சிவகுமார் தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். மேகதாதுவில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் அணையை கட்ட முடியாது தற்போது அவர்கள் அனையை கட்ட முயற்சிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் . 

அவர் அப்படி தான் பேச வேண்டும் அணைகட்ட முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளபடுமானால் தமிழகத்தில் உள்ள அதிமுக,திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென முத்தரசன் கேட்டுக்கொண்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்