Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இதுக்கு ஒரு முடிவே கிடையாதா.?...10 முன்னாள் அமைச்சர்களை கட்சியில் இருந்து நீக்கிய ஓபிஎஸ்...!

madhankumar July 25, 2022 & 16:14 [IST]
இதுக்கு ஒரு முடிவே கிடையாதா.?...10 முன்னாள் அமைச்சர்களை கட்சியில் இருந்து நீக்கிய ஓபிஎஸ்...!Representative Image.

கடந்த 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதற்கு பின்னர், கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னிர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

பின்னர் ஓபிஎஸ் நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எனவே எடப்பாடி பழனிசாமிக்கு என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு உரிமை கிடையாது, எனவே நான் அவரை கட்சியில் இருந்து நீக்குகிறேன் என அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி மேலும் சில நிர்வாகிகளையும் முன்னாள் அமைச்சர்களையும், ஓபிஎஸ் மகனும் எம்பியுமான ஓ.பி.ரவிந்த்ரநாத் ஆகியோரையும் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட 10 முன்னாள் அமைச்சர்களை ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்