Sun ,Jul 14, 2024

சென்செக்ஸ் 80,519.34
622.00sensex(0.78%)
நிஃப்டி24,502.15
186.20sensex(0.77%)
USD
81.57
Exclusive

அரசியலில் இருந்து ஓபிஎஸ் காணாமல் போவார்..! - எடப்பாடி பழனிச்சாமி ஆரூடம்..

Chandrasekar Updated:
அரசியலில் இருந்து ஓபிஎஸ் காணாமல் போவார்..! - எடப்பாடி பழனிச்சாமி ஆரூடம்..Representative Image.

அதிமுகவில் விரைவில் இரண்டு கோடி உறுப்பினரை சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசியலில் இருந்து ஓபிஎஸ் காணாமல் போவார் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்  மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 

அதிமுகவில் இதுவரை ஒரு கோடியே  30 லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் அதனை 2 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 கோடி உறுப்பினர் சேர்ப்பது இலக்காக கொண்டு செயல்படுகிறோம். மிகப்பெரிய தொண்டர்கள் நிறைந்த கட்சியாக அதிமுக உருவெடுக்கும். அப்போது ஓபிஎஸ் காணாமல் போவார்.

கர்நாடக அரசு தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா அரசு நடந்து கொள்ள வேண்டும். 50 ஆண்டுகளாக போராடி பெற்ற உரிமையை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும். நல்லதாக இருந்தாலும் ஆட்சியில் இருக்கும் போது பார்த்து பார்த்து பார்த்து  பேச வேண்டிய நிலை உள்ளது. கெட்டதாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது தைரியமாக செய்ய முடிந்தது என தமிழக முதலமைச்சர் கூறியது அவரது அனுபவம் இல்லாததை காட்டுகிறது.

அரசியலில் இருந்து ஓபிஎஸ் காணாமல் போவார்..! - எடப்பாடி பழனிச்சாமி ஆரூடம்..Representative Image

பொம்மை முதலமைச்சராக அவர் செயல்படுகிறார். இதிலிருந்து அவர் அதிமுக ஆட்சியிக்கு  எதிராக என்னென்ன செய்திருப்பார் என்று மக்கள் தெரிந்து கொள்ள அவர் பேச்சு ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது அதிமுகவின் நோக்கம். அதனடிப்படையில் படிப்படியாக அமல்படுத்த வேண்டும். படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துவதும் மதுவிலக்கால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அரசின் கடமை.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறுமியின் கை தவறுதலாக எடுக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.  மருத்துவத்துறையில் பணியாறற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு அரசு அவர்களுக்கு உதவி கரம் ஈட்ட வேண்டும்.

மாமன்னன் திரைப்படம் குறித்து கேட்ட போது மாமன்னன் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. பார்க்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. தங்களுடைய இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால் நாங்கள் அதை பார்த்திருப்போம். முன்னாள் அமைச்சர்கள் இன்னால் அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது அவர்களும் நிதிமன்றத்த்தில் வழக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு கைதி நம்பர் கொடுக்கப்பட்ட ஒருவரை பதவி நீக்கம் செய்யாதது கடந்த கால அரசியல் வரலாற்றில் இது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு, எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்