Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

நாடு முழுவதும் 144 தொகுதிகள்.. 40 பேரணிகள்.. மோடி தலைமையில் களமிறங்கும் பாஜக!!

Sekar October 09, 2022 & 10:38 [IST]
நாடு முழுவதும் 144 தொகுதிகள்.. 40 பேரணிகள்.. மோடி தலைமையில் களமிறங்கும் பாஜக!!Representative Image.

2024 தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தற்போதே தயாராகி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி 2019 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த 144 மக்களவைத் தொகுதிகளில் மோடி தலைமையில் 40 பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சி வட்டாரங்களின்படி, லோக்சபா பிரவாஸ் யோஜனா கட்டம்-2 இன் கீழ், நாடு முழுவதும் உள்ள 144 பலவீனமான அல்லது தோல்வியடைந்த மக்களவைத் தொகுதிகளில், பிரதமர் மோடி 40 இடங்களில் 40 பெரிய பேரணிகளை நடத்துவார் என்று தெரிகிறது. பிரதமரின் இந்த 40 பொதுக்கூட்டங்கள் 40 தொகுதிகளில் ஏற்பாடு செய்யப்படும்.

மீதமுள்ள 104 இடங்களில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் பயணம் செய்து கட்சிக்காக பொதுக் கூட்டங்களை நடத்துவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் தங்கியிருக்கும் காலத்தில், கிளஸ்டர் பொறுப்பாளர்கள் செல்வாக்கு மிக்க உள்ளூர் பிரமுகர்களுடன் தொடர்ந்து சந்திப்புகளை நடத்துவதுடன், பாஜகவின் உள்ளூர் அதிருப்தித் தலைவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண வேண்டும் என்பது அக்கட்சியின் உத்தியாக உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தொகுதிகளில் தங்கியிருந்து உள்ளூர் மத தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரையும் சந்திக்க அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்